மனித உரிமை என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது : தனியார் அமைப்புகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
21 October 2021, 2:21 pm
DGP Warn-Updatenews360
Quick Share

மனித உரிமை என்ற பெயரை, தனியார் அமைப்புகள் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதெடர்பாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மனித உரிமைகளை பேணிக்காக்க, தேசிய அளவில் தேசிய மனித உரிமை ஆணையமும், மாநில அளவில் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையமும் செயல்பட்டு வருகின்றன.

மனித உரிமைகள் என்ற வார்த்தைகளை சில தனியார் அமைப்புகள் தங்களது பெயருடன் சேர்த்துக்கொண்டு தங்களை தேசிய மற்றும் மாநில உரிமைகள் ஆணையங்களுடன் தொடர்புடையதாக அடையாளப்படுத்திக் கொண்டு செயல்பட்டு வருவதாக காவல்துறைக்கு பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது.

தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்தின் படி மனித உரிமைகள் என்ற சொல்லை தனியார் அமைப்புகள் தங்களது அமைப்பின் பெயருடன் சேர்த்து பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி தனியார் அமைப்புகள் தொடங்கப்பட கூடாது என்று தெரிவித்துள்ளார். வாகனங்களில் மனித உரிமைகள், ஒன்றியம், மாநில, கவுன்சில் என்ற வார்த்தைகளை தனியார் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு மாவட்டத்தில் நமது காவல்துறை அதிகாரிகளே இவ்வாறான அமைப்பை திறந்து வைத்திருக்கும் சம்பவமும் நடந்துள்ளது. எனவே, இது குறித்த விழிப்புணர்வு காவல்துறையினர் மற்றும் பொதுமக்களிடையே தேவை என்றும் அந்த அறிக்கையில் டிஜிபி வலியுறுத்தியுள்ளார்.

Views: - 226

0

0