மேம்பால பணி விபத்துக்கு ஒப்பந்ததாரரின் அலட்சியமே காரணம்: பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு பேட்டி…

Author: Udayachandran RadhaKrishnan
29 August 2021, 1:41 pm
Quick Share

மதுரை: மதுரை நாராயணபுரம் பகுதியில் ஏற்பட்ட மேம்பால விபத்து பகுதியினை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு ,மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு பேசுகையில், கர்மாலா திட்டத்தின் கீழ் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டம், 3ஆண்டுகாலமாக நடைபெறுகிறது, அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் முடிவடைகிறது. மேம்பால விபத்து தவிர்க்கப்பட வேண்டியது, ஒப்பந்ததாரரின் அஜாக்கிரதையாலயே முழுக்க முழுக்க இந்த விபத்து நடந்துள்ளது, பாலம் இணைப்பு பணியின் போது ஹெரிடரை இணைக்கும் போது ஹைட்ராலிக் இயந்திரம் பழுது காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது, 160டன் ஹெரிடரை தூக்கி நிறுத்த 200டன் ஹைட்ராலிக் பதிலாக குறைவாக பயன்படுத்தபட்டது என ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளோம் எனவும்,

இது பாதுகாப்பற்ற நிலையில் செயல்படுத்தியதன் காரணமாக நடைபெற்றுள்ளது, முழுக்க முழுக்க ஒப்பந்ததாரரின் அலட்சியமே விபத்துக்கு காரணம் எனவும், பணி நடைபெற்ற இடத்தில் மேற்பார்வை பொறியாளர் இருப்பதற்கு பதிலாக தொழிலாளர் மட்டுமே இருந்துள்ளார், சரியான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாத நிலையில் பணிகள் நடைபெற்றுள்ளது, ஹைட்ராலிக் ஜாக் தன்மை குறித்து விசாரணை நடத்தி ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளோம் எனவும், என்ஐடி தொழில்நுட்ப நிபுணரான திருச்சி பாஸ்கர் தலைமையிலான குழு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவுள்ளோம், விபத்தில் உயிரிழந்தவருக்கு நிதியுதவி அளிப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார், அவர்களுடைய கண்ணோட்டத்தில் விசாரணை அதிகாரிகள் விளக்கமளிக்கின்றனர். விசாரணை குழுவானது விபத்தை தொடர்ந்து பாலத்தின் பணிகளை முழுமையாக ஆய்வுசெய்யும் என்றார்.

விபத்து வரும் அறிக்கையை பொறுத்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கைகளை எடுப்பார். ஒப்பந்ததாரர் எக்மா ஸ்டெர்லைட் என்ற பாதுகாப்பு பணி தொடர்பான ஒப்பந்த நிறுவன பொறியாளர் சம்ப இடத்தில் இல்லை அது தொடர்பாக விசாரணை நடத்தப்படும். திமுக அரசு அமைந்த பின் சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்ய அரசு சார்பில் தர பரிசோதனை குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாக அதிகாரிகளுக்கு நோட்டிஸ் அனுப்பியதோடு, ஒப்பந்தங்களையும் ரத்து செய்து நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். தமிழகத்தில் இனி நடைபெறும் பாலம் , சாலை பணிகள் நடைபெறும் பகுதிகளில் LOG ஷீட் முறையை நடைமுறைப்படுத்தவுள்ளோம். திட்ட பணிகளின் போது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து பணிகளை தொடர்வோம் என்றார்.

Views: - 234

0

0