அரியலூர் ஆட்சியரை தொடர்ந்து அடுத்த அரசு அதிகாரி : சைக்கிளில் சென்று ஆய்வு செய்த சுகாதாரத் துறை துணை இயக்குநர்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 December 2021, 1:26 pm
Cycle Govt Staff -Updatenews360
Quick Share

அரியலூர் : ஆட்சியரை தொடர்ந்து சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்ட சுகாதாரபணிகள் துணை இயக்குனரின் செயல் பாராட்டை பெற்று வருகிறது.

சுற்றுசூழலை பாதுகாக்க வாரத்திற்கு ஒரு நாள் பொதுஊர்தி அல்லது மிதிவண்டியில் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என தமிழக அரசின் தலைமை செயலாளர் அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

இதனையொட்டி அரியலூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் கீதாராணி இன்று அரியலூரிலிருந்து சைக்கிள் மூலம் சென்று தனது ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

அதன்படி அரியலூர், கொல்லாபுரம், தாமரைக்குளம் வழியாக ஒட்டக்கோவில் துணை சுகாதார நிலையத்திற்கு சென்று அங்கு குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியினை ஆய்வு செய்தார். மேலும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவையடுத்து இன்று முழுவதும் சைக்கிளில் சென்றே தனது ஆய்வு பணிகளை தொடர உள்ளதாக தெரிவித்தார்.

Views: - 356

0

0