நடுக்காட்டில் சிறுத்தையுடன் காட்டெருமை போட்ட சண்டை.! முடிவில் பரிதாபம்!!

10 August 2020, 8:41 pm
Nilgiri Animals Fight - Updatenews360-Recovered
Quick Share

நீலகிரி : குன்னூரில் சிறுத்தை மற்றும் காட்டெருமை சண்டையிட்டு இரண்டும் உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனப்பகுதிகள் என்பதால் அண்மை காலமாக வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனிடையே பல விலங்குகள் இயற்கையாகவும், சில விபத்துகளாகவும் உயிர் இழந்து வருகின்றன.

குறிப்பாக காட்டெருமை, கரடி, சிறுத்தை போன்ற விலங்குகள் கிராமத்திற்குள் உலா வாரும் சம்பவம் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் குன்னூர் சேலாஸ் அருகேயுள்ள அறையட்டி என்னும் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் தேயிலை தோட்டத்தில் சிறுத்தையும் காட்டெருமையும் மோதி கொண்டு சம்பவ இடத்திலேயே இரண்டும் பலியானது.

வழக்கம்போல் தோட்ட உரிமையாளர் அப்பகுதியில் பணிக்காக செல்லும் போது சிறுத்தை மற்றும் காட்டெருமை உயிரிழந்ததை குறித்து வனத்துறையினரிடம் தகவல் அளித்தார். வன சரகர் சசிகுமார் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் உயிரிழந்ததை குறித்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 0

0

0