காணாமல் போன மகனை கண்டுபிடித்து தர முதலமைச்சரிடம் முறையிட்ட மூதாட்டி : அதிகாரிகளுக்கு ஆர்டர் போட்ட CM…

Author: kavin kumar
5 February 2022, 4:56 pm

புதுச்சேரி : காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்து தர கோரி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம் தூத்துக்குடியை சேர்ந்த மூதாட்டி மனு அளித்தார்.

தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் குருசாமி, பேச்சியம்மாள் தம்பதியினர். இவர்கள் அங்கு சலவைத்தொழில் செய்து வருகின்றனர். இந்த தம்பதியினரின் மகன் ரவி (30). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு புதுச்சேரி வந்த போது விபத்து ஒன்றில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பேச்சியம்மாவிற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து 2019 ஆண்டு முதல் புதுச்சேரிக்கு கடந்த 2 ஆண்டுகளாக பல முறை வந்து தேடிவிட்டு செல்கிறார்.

மேலும் புதுச்சேரி உருளையன்பேட்டை காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். இருந்தாலும் அரசு மருத்துவமனை, புதுச்சேரி நகரப் பகுதி முழுவதும் தேடி அலைந்த பேச்சியம்மாள் தனது மகனை தேடுவதற்காக சுமார் 60 ஆயிரத்திற்கும் மேல் செலவு செய்துள்ளார். தன்னிடம் வைத்துள்ள பையில் மகனை கண்டுபிடிக்க மனுக்கள் ஆகவும், புகைப்படங்கள், தொலைபேசி எண்கள் வைத்துள்ள அவர், சாலைகளில் செல்பவர்களிடம் தனது மகனின் புகைப்படத்தை காண்பித்து மகனை விசாரித்து கண்டுபிடித்து தரும்படி கேட்கிறார்.

இந்த நிலையில் இன்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை பேச்சியம்மாள் சந்தித்து காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்து தர கோரிக்கை விடுத்தார். இதையடுத்து உடனடியாக இவரது மகனை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!