ஆஸ்கர் விருதுக்கு இந்த ஆண்டு தேர்வான ஒரே ஒரு தமிழ் படம் : சினிமாத்துறையின் உயரிய விருதுப் பட்டியலில் இடம்பிடித்த மண்டேலா!!

Author: Udayachandran RadhaKrishnan
21 October 2021, 4:18 pm
Madela Oscar -Updatenews360
Quick Share

நடிகர் யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளது

மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு – ஷீலா ராஜ்குமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி நேரடியாக தனியார் தொலைக்காட்சியில் வெளியான மண்டேலா திரைப்படம் பாராட்டுக்களை குவித்தது.

சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்ட படம் மட்டுமல்லாமல், படத்துக்கு பல எதிர்ப்புகள் இருந்து வெற்றிகரமாக வெளியானது. யோகி பாபுவின் அசாத்திய நடிப்பால் வழிபாட்டியாக ஷீலா ராஜ்குமார் நடித்திருந்தார்.

இரு சாதிப் பிரிவினர் ஒரு கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் பின்னணியில் இந்த படம் அமைந்திருந்தது. முடித்திருத்தம் செய்யும் தொழிலாளியின் ஒற்றை வக்கு தேர்தலின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சூழல் ஏற்படும் தொனியில் படம் அமைக்கப்பட்டிருந்தது.

படத்திற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களை குவித்த நிலையில் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் பரத் சங்கர் இசையமைத்திருந்தார்.

தற்போது சினிமாத்துறையில் உலகின் உயரிய விருதான ஆஸ்கர் விருதுக்கு இப்படம் தேர்வாகியுள்ளது. இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்படவுள்ள 14 படங்களில் தமிழில் இருந்து மண்டேலா மட்டும் தேர்வாகியுள்ளது குறிப்பிடதக்கது.

ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பாராட்டுக்களைக் குவித்த ‘நாயட்டு’ படமும், வித்யா பாலனின் ஷெர்னி படமும் பரிந்துரைப் பட்டியலில் உள்ளன. இந்தப் 14 படங்களைப் பார்த்துவிட்டு ஒரு படத்தை தேர்வு செய்து ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் அனுப்புவார்கள். இதற்கான, திரையிடல் தற்போது கொல்கத்தாவில் நடந்து வருகிறது. 

Views: - 293

0

0