கட்சிக்கும் உண்மையில்லை.. மக்களுக்கும் உண்மையாக நடந்து கொள்ளாமல் உள்ளார் அமைச்சர் : பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
9 October 2022, 4:16 pm

கன்னியாகுமரி மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் ஆதாயத்திற்காக மதரீதியான பிரச்சினைகள் நீண்ட கலவரங்களுக்கு பின்பாக கடந்த கால நிகழ்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து அமைதி நாடி அனைத்து மக்களும் இருக்கும்போது மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற முனைப்போடு திமுகவின் அமைச்சர் மனோ தங்கராஜ் செயல்பட தொடங்கி இருக்கிறார்.

காரணம் 30 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள பிரச்சினைகள் பிரச்சனையில் இல்லாத ஊரில் புதிய பிரச்சினைகள் எல்லாம் எழுப்பி இப்போது போது பூதாகரமாக கொண்டு வரக்கூடிய நிலை உள்ளது.இது மிகவும் துரதிஷ்டவசமானது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை வந்து விடக்கூடாது என்று கண்ணும் கருத்துமாக இருப்பார் என்று நினைக்கின்றேன். அப்படிப்பட்ட சூழ்நிலை மாவட்ட ஆட்சியாளரும் காவல்துறை கண்காணிப்பாளரும் ஒரு அழுத்தங்கள் காரணமாக நெருக்கடிக்கு தள்ளப்படுகிறார்கள்.

அமைச்சர் மனோ தங்கராஜ் பேசும் போது அவர் எனக்கு சவால் விட்டு உள்ளார் .எங்கு வேண்டுமானாலும் வாருங்கள் விவாதத்திற்கு வாருங்கள் என்று கூறியுள்ளார். நான் அதற்கு தயாராக உள்ளேன். மனோ தங்கராஜ் அவர் சார்ந்துள்ள கட்சிக்கும் உண்மையாக இருக்க வேண்டும்.

அவரது செயல்பாடுகள் அந்த நம்பிக்கை தரவில்லை. மாவட்டத்திலிருந்து குவாரிகள் மூலமாக வெளிமாநிலங்களுக்கு கற்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. இதில் ஆணை பிறப்பிக்க வேண்டியது அமைச்சர். அவர் கோரிக்கை வைக்கக் கூடாது. மாவட்ட கலெக்டரிடம் அவர் மனு கொடுக்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 51 டவுன் பஞ்சாயத்துகளுக்கும் ஒவ்வொரு டவுன் பஞ்சாயத்துக்கும் ஏறக்குறைய 52 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது மத்திய அரசின் நிதி இந்த ரூபாயில் 15 சதவீதம் தனியாக தனக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று எழுதப்படாத ஆணை எல்லா பஞ்சாயத்துக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதைவிட தலைகுனிவு வேற ஏதும் உண்டா.15% தாருங்கள் என்று கூறுகின்ற அவ்வளவு தரம் தாழ்ந்து போய் உள்ளார்கள்.

குமரி மாவட்டத்தில் இருந்த சூழ்நிலைகளை எல்லாம் தமிழக முதல்வர் நேரடி பார்வையை கொண்டு செல்ல வேண்டும். என்பதற்காக சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி தலைமையில் 11ந் தேதியிலிருந்து 15-ந் தேதிக்குள் நேரம் கொடுக்க வேண்டும் என்று மனு கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!