சத்தமே இல்லாமல் சாதித்து காட்டிய காமெடி நடிகரின் மகன் : திருப்பூர் மாவட்ட சார் ஆட்சியராக நியமனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 October 2022, 6:23 pm
Chinni Jayanth - Updatenews360
Quick Share

நடிகர் சின்னி ஜெயந்த் 1984ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த கை கொடுக்கும் கை என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார். இவர் 300க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள நிலையில், 30 வருடங்களுக்கு மேல் இவர் திரைத்துறையில் நடித்து வருகின்றார்.

நடிகர் மட்டுமல்லாது நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், மிமிக்ரி கலைஞர் என பன்முகம் கொண்ட இவர், பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் இவர் பல்வேறு தொலைகாட்சி நிகழ்சிகளிலும் நாடகங்களிலும் பணியாற்றி இருக்கிறார். தமிழக அரசு வழங்கும் கலைமாமணி விருதினை 2009 ஆம் ஆண்டு பெற்றார் . இவர் பல குரல் ஆராய்ச்சி செய்து வருவதற்காக சர்வதேச திறந்தவெளி மாற்று மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கெளரவ டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.

இவரது மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் திருப்பூர் மாவட்ட சப் கலெக்டராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இதனையடுத்து அவருக்கு திரையுலகினை சேர்ந்த பலரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் குடிமைப்பணி தேர்வுகள் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது இந்த தேர்வு முடிவுகள் 2020 ஆம் ஆண்டு வெளியான நிலையில், நடிகர் சின்னி ஜெயந்தின் மகனான ஸ்ருதன் ஜெய் நாராயணன் தேசிய அளவில் 75 ஆவது இடத்தை பிடித்தார்.

இதை அடுத்து அவருக்கு முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி நேஷனல் அகாடமி ஆப் அட்மினிஸ்ட்ரேஷன் பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. பணி நிறைவடைந்த பிறகு 12 பேர் ஐஏஎஸ் அதிகாரிகளாக தமிழக அரசு பணிக்கு திரும்பிய நிலையில், மத்திய அரசு பணியில் இருந்த ஸ்ருதன் ஜெய் நாராயணன் முதன் முறையாக தூத்துக்குடி பயிற்சி துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது சுருதன் ஜெய் நாராயணன் திருப்பூர் மாவட்ட சார் ஆட்சியராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதை அடுத்து நடிகர் சின்னத்துக்கும் அவரது மகனுக்கும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனை தனது சமூக வலைதளப் பக்கத்த்தில் நடிகர் சின்னி ஜெயந்த் பகிர்ந்துள்ள நிலையில், லைக்ஸ்களும் குவிந்து வருகிறது.

Views: - 910

1

0