பூசாரிக்கு கோயில் கட்டி விழா நடத்திய விசித்திர கிராம மக்கள் : கண்ணீர் குளமாக்கிய கும்பாபிஷேகம்!!

15 July 2021, 10:58 am
Quick Share

திண்டுக்கல்: வத்தலக்குண்டு அருகே உயிரிழந்த பூசாரிக்கு கிராம மக்கள் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம்  வத்தலக்குண்டு அருகேலட்சுமி புரத்தில் கலியுக சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. 2000 ஆண்டு பழமையான இக்கோவிலில் தமிழகத்தின் இரண்டாவது பெரிய நந்தி சிலை உள்ளது. இக்கோவில் பூசாரி சிதம்பரம் அருகிலுள்ள ஒரு சிறு கிராமத்தில் வசித்து வந்தார். அதனாலேயே அக்கிராமம் பூசாரிபட்டி என்ற பெயர் பெற்றது. அவருக்குப் பின்னர் அவரது மகன் நடராஜன்கோவில் பூசாரி ஆனார். அவர் வாழ்நாள் முழுவதும் கோவிலுக்காகவே அர்ப்பணித்தார். அதோடு மட்டுமில்லாது பூசாரிபட்டி கிராமத்திற்கு பல சேவைகள் செய்தார். கடந்த ஆண்டு இதே நாளில் அவர் மரணித்தார்.

ஊரே சோகத்தில் மூழ்கியது. அவர் நினைவாக அவரது சமாதி அருகே அருள்மிகு நடராஜன்சுவாமி திருவரசு திருக்கோவில் என்ற பெயரில் ஒரு கோவில் கட்டினர். நேற்று அவரது நினைவு நாளில் அந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. ஊர் மக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தில் இப்பகுதி முக்கிய பிரமுகர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  இதற்கான ஏற்பாடுகளைகலியுக சிதம்பர ஈஸ்வரர் கோவில்பூசாரியும் கூட்டுறவு  வீடு கட்டும்சங்க தலைவருமான சுந்தர் தலைமையில் திருப்பணி கமிட்டியினர் செய்து இருந்தனர்.    

Views: - 197

0

0