கரூர் எம்பியை விரட்டி ஓட வைத்த மக்கள் : எம்பியை பாதுகாப்பாக மீட்ட தி.மு.க.வினர்!!

18 October 2020, 12:30 pm
MP Jothimani - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : சிப்கோ நிறுவனம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட கரூர் எம்பி ஜோதிமணியை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த ஆர்.கோம்பை பகுதியில் சிப்கோ நிறுவனம் அமைப்பதற்காக முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் சிப்கோ நிறுவனம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கரூர் எம்பி ஜோதிமணி தடுத்து நிறுத்த போராட்டம் நடத்தினார். அப்போது அதிமுக ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன் வந்து இந்த சிப்கோ நிறுவனம் வந்தால் 5000 இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்று எடுத்துக் கூறினார்.

அதை செவி கொடுத்து கேட்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பொதுமக்களால் வெற்றி பெற்ற எம்பி, மக்களுக்காக அமையவுள்ள நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மக்களுக்கு நன்றி காட்டும் விதமா என அங்கு கூடியிருந்தவர்கள் கேள்வி எழுப்பினர்.

தடுக்க வேண்டாம் என அப்பகுதியில்னர் கேட்டதற்கு, எந்த பதிலும் அளிக்காமல் திமுகவினர் பொதுமக்களை தள்ளி விட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மக்கள் கேள்வி எழுப்புவதை பதில் கொடுக்காமல் அவரது ஆதரவாளர்கள் அவரை பத்திரமாக மீட்டு வேகமாகச் சென்று காரில் அமர்ந்து சென்று விட்டார்.