சிலிண்டர் போட வந்தவர் பெண் குளிப்பதை வீடியோ எடுக்க முயற்சி : கோவையில் அதிர்ச்சி!!

Author: Udayachandran
16 October 2020, 11:10 am
cylinder Video - Updatenews360
Quick Share

கோவை : குளியலறையில் பெண் குளிப்பதை செல்போன் வாயிலாக படம்பிடிக்க முயன்ற சிலிண்டர் போடும் நபரை போலிசார் கைது செய்தனர்.

கோவையில் பொண்ணையராஜபுரம் பகுதியில் வசித்து வரும் 40 வயதுடைய பெண் குளிக்கும் போது செல்போன் மூலம் படம்பிடிக்க முயன்ற சிலிண்டர் போட வந்த நபரை வெரைட்டி ஹால் போலிசர் கைது செய்தனர்.

சமுகம் – Page 2 – Quick Line News

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு 40 வயதுடைய பெண் வீட்டின் வெளியே உள்ள குளியளறையில் குளித்துவிட்டு கதவின் மேல் போட்டுயிருந்த துணியை எடுத்துவிட்டு பார்க்கும் போது யாரோ செல்போனில் படம் பிடிப்பது போன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்,

இதையடுத்து கூச்சலிட்டதுடன் அந்த நபர் அங்கியிருந்து தப்பித்துள்ளார், குளியலறை விட்டு வெளியே வந்து பார்த்த போது சிலிண்டர் போடும் நபர் அவசர அவசரமாக வண்டியை எடுத்துவிட்டு சென்றது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து அப்பெண்ணின் கணவர் அளித்த புகாரை அடுத்து போலிசார் விசாரணை நடத்தியதில் சிலிண்டர் வைக்க செல்லும் போது வீட்டில் யாருமில்லாததை அறிந்த சிலிண்டத் போடும் நபர் செல்போன் வாயிலாக படம் பிடிக்க முயன்றதாக ஒப்புக்கொண்டான். இதையடுத்து போலிசார் செல்வராஜை கைது செய்தனர்.

Views: - 87

0

0