லாரி சக்கரம் ஏறி பைக்கில் வந்தவர் தலை நசுங்கி பலி : வெளியான கோரமான சிசிடிவி காட்சி!!

2 November 2020, 7:22 pm
Bike Accident- Updatenews360
Quick Share

சென்னை : கண்டெய்னர் லாரியின் சக்கரம் தலை மீது ஏறி , இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் தலை நசுங்கி பலியான சம்பவம் குறித்து வெளியான சிசிடிவி காட்சி காண்போரை உறைய வைத்துள்ளது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கிருஷ்ணா தோட்டம் 1 வது தெருவை சேர்ந்தவர் முத்துக் குமார் (வயது 38). இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். மூலக்கடை சந்திப்பில் இருந்து தண்டையார் பேட்டை நெடுஞ்சாலை வழியாக அவரது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது கண்டெய்னர் லாரியை முந்த முயற்சி செய்த போது , நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பின்னால் வந்த கண்டெய்னர் லாரி முத்துக் குமாரின் தலைமீது ஏறி இறங்கியதில் ஹெல்மெட் நசுங்கி முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார்.

இது குறித்து கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முத்துக் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 14

0

0

1 thought on “லாரி சக்கரம் ஏறி பைக்கில் வந்தவர் தலை நசுங்கி பலி : வெளியான கோரமான சிசிடிவி காட்சி!!

Comments are closed.