ஈரோடு மாவட்டத்தில் முக்கிய இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் : மிரட்டல் விடுத்த நபர் கைது!!

13 November 2020, 11:31 am
Erode Rumour 1- Updatenews360
Quick Share

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தின் முக்கிய இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய இடங்களான பன்னீர்செல்வம் பூங்கா, ரயில் நிலையம், மணிக்கூண்டு மற்றும் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தொலைபேசி அழைப்பு மூலம் மர்ம நபர் மாஸ்டர் கன்ட்ரோல் அறைக்கு நேற்றிரவு தெரிவித்து அழைப்பை துண்டித்துள்ளார்.

இதனையடுத்து ரயில்வே காவல்துறையினர் மற்றும் தெற்கு காவல்துறையினரின் தீவிர விசாரணையில் மர்ம நபரின் குரல் பதிப்பு வைத்து விசாரணை மேற்கொண்டதில் கடந்த ஆண்டும் இதே போல் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

மேலும் இவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் என்றும் கடந்த ஆண்டு இதே போன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் சிறைசென்று வந்தவர்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 18

0

0