பொதுமக்களை தரதரவென்று இழுத்து சென்று கைது செய்த போலீஸ்… பரபரப்பில் ராஜபாளையம்… அதிர்ச்சி வீடியோ!!!

Author: Udayachandran RadhaKrishnan
30 August 2023, 1:16 pm
Rajapalayam - Updatenews360
Quick Share

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முடங்கியார் சாலையில் மூன்று கல்லூரிகளும் ஆறு பள்ளிகளும் உள்ளன. இந்நிலையில் நேற்று மாலை தனியார் கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்த பொழுது அருகே அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த நபர்கள் இருசக்கர வாகனத்தில் மோதி உள்ளனர் இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது

கல்லூரி மாணவர்கள் மீது அரிவாள் கொண்டு வெட்டுவதற்காக வந்ததாக கூறி மாலையாபுரம் பொது மக்கள் நேற்று மாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் போலீசார் நான்கு பேரை கைது செய்து விசாரணை செய்து வந்ததாகவும் நேற்று இரவு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதாகவும் தெரிவித்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நான்கு பேரையும் நீதிபதி விடுவித்து விட்டதாக கூறி இன்று அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வனத்துறை சோதனை சாவடி அருகே சோமையாபுரம் மற்றும் மாலையாபுரம் பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறை ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாகவும் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யாமல் விட்டு விட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் வந்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என கூறி தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

சம்பவ இடத்திற்கு வந்த ராஜபாளையம் ADSP மணிவண்ணன் காவல் துறை கண்காணிப்பாளர் ப்ரீத்தி மற்றும் வட்டாட்சியர் ராமச்சந்திரன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் 4மணி நேரத்திற்கு மேலாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் காலையில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் மற்றும் அலுவலக செல்லக்கூடியவர்கள் செல்ல முடியாமல் பாதிப்பு ஏற்பட்டது

இதனால் முடங்கியார் சாலையில் அமைந்துள்ள 3 கல்லூரிகள் நான்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. அதேபோல் ராஜபாளையம் நகருக்கு செல்லக்கூடிய மாணவர்கள் செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்தனர்.

தொடர்ந்து மறியல் போராட்டம் 4 மணி நேரத்துக்கு மேலாக நீடித்தால் காவல்துறை பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு தோல்வி அடைந்து அடுத்து காவல்துறை வலுக்கட்டாயமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்

அப்பொழுது போலீசாருக்கும் போராட்ட நடத்தியவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போலீஸ் வாகனம் குவிக்கப்பட்டு பரபரப்பும் பதட்டமும் நிலவி வருகிறது.

இது குறித்து சமூக அலுவலர்கள் கருத்து கூறும் போது இருதரப்பு மாணவர்கள் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையின் காரணமாக அலுவலகம் செல்லக் கூடியவர்கள் கல்லூரி செல்லக்கூடியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகையால் இதுபோன்று போராட்டங்கள் தொடர்ந்து இப்பகுதியில் நடைபெறுவதால் மாற்றுப் பாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும் என கோரிக்கை வைத்தனர்

Views: - 274

0

0