முகநூலில் சிறுமிகளுக்கு நூல் விட்ட காமுகன் : திருமணமான பின்னும் அந்தரங்க போட்டோக்களை வைத்து பணம், நகை பறிப்பு!!

14 July 2021, 11:32 am
FB Harrassment -Updatenews360
Quick Share

திருப்பூர் : பள்ளிப் பருவத்தில் முகநூலால் சகோதரிகளுக்கு ஏற்பட்ட நட்பு மூலமாக, திருமணம் நடந்த பிறகு தற்போது தங்கள் வாழ்க்கையை தொலைத்துள்ளனர்.

திருப்பூரைச் சேர்ந்த 19 வயது பெண் திருமணம் முடிந்து தற்போது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அந்தப் பெண் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

அதில் கடந்த 2014-ம் ஆண்டு, சிறுமியாக இருந்தபோது சென்னையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவருடன் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டதாகவும், அதன் பிறகு அந்தரங்க புகைப்படங்களை அவருடன் பரிமாறிக் கொண்டதாகவும், இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு தனக்கு 17 வயதாக இருந்தபோது, திருப்பூர் வந்த செந்தில்குமார் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு சென்னைக்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு அந்தப் பெண்ணுக்கு தற்போது வேறு ஒருவருடன் திருமணம் முடிந்து விட்டது. இருப்பினும் செந்தில்குமார் அந்த பெண்ணை மிரட்டி பணம், நகையை பறித்து வந்துள்ளார். அவரது மிரட்டல் அதிகரிக்கவே அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகாரில் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. விசாரணையில் செந்தில்குமார் அந்த பெண்ணை மட்டும் இல்லாமல் அவரது அக்காவையும் இதுபோல் சமூகவலைதளம் மூலமாக நட்பை ஏற்படுத்தி அந்தரங்க புகைப்படங்களை பெற்றுள்ளார்.

அவருக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்துள்ளது. மேலும், சகோதரிகள் இருவரையும் மிரட்டி 32 சவரன் நகை, ரூ. 20,000 ரொக்கம் பெற்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து சென்னை – கொளத்தூரை சேர்ந்த செந்தில்குமார் (வயது 42) மீது போக்சோ உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார் கைது செய்தனர்.

செந்தில்குமார் பிளஸ்-2 வரை படித்து, சென்னையில் ஒரு செல்போன் சர்வீஸ் கடையில் வேலை செய்யும் ஊழியர் ஆவார். பள்ளிப் பருவத்தில் சமூக வலைதளங்களில் சகோதரிகளுக்கு ஏற்பட்ட நட்பு மூலமாக திருமணம் நடந்த பிறகு தற்போது தங்கள் வாழ்க்கையை தொலைத்துள்ளனர். இந்தச் சம்பவம் திருப்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 250

0

0