போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீசி அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடி : மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 January 2023, 10:24 am

மதுரை காவல்துறை சார்பு ஆய்வாளரை பெட்ரோல் குண்டுவீசி அரிவாளால் வெட்ட முயன்ற ரௌடி தலைமறைவான நிலையில் போலிசார் தீவிரமாக தேடிவருகின்றனர்

மதுரை மாநகர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான கூல்மணி(எ) மணிகண்டன் பல்வேறு கொலை, கொள்ளை , ஆட்கடத்தல் போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தெப்பக்குளம் காவல்நிலையத்தில் சரா்பு ஆய்வாளர் அழகுமுத்து என்பவர் கூல்மணி மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் சார்பு ஆய்வாளர் அழகுமுத்து மதுரை SS காலனி காவல்நிலையத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று மாலை சார்பு ஆய்வாளரான அழகுமுத்து சக காவலர்களுடன் மதுரை மாடக்குளம் பகுதியில் வாகன தணிக்கை பணியில் இருந்துள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை சார்பு ஆய்வாளர் அழகுமுத்து மடக்கியபோது காரினுள் இருந்தது பிரபல ரௌடி கூல்மணி என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காரை மறித்து விசாரித்தபோது திடிரென கூல்மணி தான் வைத்திருந்த அரிவாளால் சார்பு ஆய்வாளர் அழகுமுத்துவை வெட்ட முயன்றபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விரட்டியபோது காவல்துறையினர் மீது எதிர்பாரதவிதமாக பெட்ரோல் குண்டை வீசிவிட்டு காரை அந்த பகுதியிலயே நறுத்திவைத்துவட்டு தப்பியோடினார்.

இந்நிலையில் பிரபல ரௌடி கூல்மணி மீது SS காலனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கூல்மணியை தேடிவருகின்றனர்.

மதுரை மாநகரில் ரோந்து பணியில் இருந்த காவல்துறையினரை பிரபல ரௌடி வெட்ட முயன்று பெட்ரோல் குண்டு வீசிதாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!