தாயே குழந்தையை விற்று நாடகமாடிய வழக்கில் பரபரப்பு திருப்பம் : தீரன் பட பாணியில் கர்நாடகாவில் தமிழக போலீசார் அதிரடி!

Author: Udayachandran RadhaKrishnan
20 January 2023, 10:15 am
Child Rescue - Updatenews360
Quick Share

பெற்ற தாயே குழந்தையை விற்றுவிட்டு கடத்தல் நாடகமாடிய வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், லால்குடி, அரியூர் பகுதியை சேர்ந்த அய்யாசாமி மகன் வழக்கறிஞர் பிரபு(வயது 42), அவரது மனைவி மெர்சி இருவரும் வழக்கறிஞர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் வழக்கறிஞர் பிரபுக்கும், மெர்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில், திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த சண்முவள்ளி வழக்கு சம்பந்தமாக வழக்கறிஞர் பிரபுவை சந்திக்கிறார். இந்த சந்திப்பு கள்ளக்காதலாக மாறி இருவரும் வாழ்ந்து வருகின்றனர்.

லால்குடி அடுத்த அன்பில் மங்கமாள்புரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகள் ஜானகி வயது 32 வழக்கறிஞர் பிரபுவின் அலுவலகத்தில் பணியாளராக பணிபுரிந்து வந்த நிலையில் ஜானகி பல ஆண்களிடம் தகாத உறவு வைத்துக் கொண்டதால் கர்ப்பம் தரித்துள்ளார்.

மேலும் கடந்த ஜூலை மாதம் ஜானகி 7 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்ததையடுத்து ஜானகி என்ன செய்வது என்று தெரியாமல் வழக்கறிஞர் பிரபுவிடம் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி இதற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் பிரபு, ஜானகியிடம் குழந்தை பிறக்கட்டும் பார்த்துக் கொள்வோம் என்று கூறியுள்ளார். ஆனால் பிரபு மற்றும் அவரது கள்ள மனைவி சண்முகவள்ளி இருவரும் சேர்ந்து குழந்தை பிறந்தால் 5 லட்சம் ரூபாய்க்கு விற்பதற்காக ஜானகிக்கு தெரியாமல் திட்டம் தீட்டியுள்ளனர்.

நிறைமாத கர்ப்பிணியான ஜானகி செப்டம்பர் மாதம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் தனியார் மருத்துவமனையில் கணவர் யார் என்பது தெரியாததால் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.

அங்கு ஜானகிக்கு செப்டம்பர் 17ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது கணவர் யார் என மருத்துவர்கள் கேட்டுள்ளனர் அதற்கு பதில் தராதால் மருத்துவமனை நிர்வாகம் சைல்ட் லைனுக்கு தொடர்பு கொண்டு ஜானகி குழந்தை பிறந்தது குறித்து தெரிவித்தனர். இதை தெரிந்து கொண்ட வழக்கறிஞர் பிரபு சண்முகவள்ளி இருவரும் சேர்ந்து ஜானகி மற்றும் குழந்தையை தூக்கிக் கொண்டு அங்கிருந்து தலைமறைவாகினார்.

பிறந்து 10 நாட்கள் ஆன குழந்தையை வழக்கறிஞர் பிரபு மற்றும் அவரது கள்ள மனைவி சண்முகவள்ளி இருவரும் சேர்ந்து ஜானகி மற்றும் பிறந்த குழந்தையை காரில் அழைத்துக் கொண்டு நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள உத்தமர் கோவில் ரயில்வே மேம்பாலம் அருகில் கடந்த 23ஆம் தேதி சென்று அங்கு குழந்தையை விற்று விடலாம் என ஜானகியிடம் தெரிவித்து குழந்தையை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து 80 ஆயிரம் ரூபாய் ஜானகியிடம் கொடுத்துவிட்டு இருபதாயிரம் ரூபாய் பிரபு மற்றும் சண்முகவள்ளி எடுத்துக் கொள்கின்றனர்.

ஆனால் பிரபு பெண் குழந்தையை பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார் என்பது தெரியவந்த நிலையில், ஜானகி இது குறித்து லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தான் குழந்தையை கடத்தி சென்று விட்டதாக புகார் தெரிவித்துள்ளார்.

புகாரின் மீது நடவடிக்கை இல்லாததால் கடந்த அக்டோபர் மாதம் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் தன் குழந்தையை காணவில்லை எனவும், இதற்கு காரணம் வழக்கறிஞர் பிரபு மற்றும் சண்முகவள்ளி தான் என புகார் அளித்துள்ளார்.

மேலும் ஜானகி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு பதிவிடுகிறார். அதில் போலீசார் என் குழந்தையை கண்டுபிடிக்காமல் தகுந்த நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும், இதற்கு காரணமான பிரபு மற்றும் சண்முகவள்ளி தான் என இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார்.

மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி அறிவுறுத்தலின்படி திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் தகவல் தெரிவிக்கப்பட்டு முழு விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்த நிலையில் லால்குடி சரக காவல் துணை கண்காணிப்பாளர் அஜய்தங்கம் தலைமையில் மூன்று ஆய்வாளர்கள் 15 போலீசாரை கொண்டு 4 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 4ம் தேதி ஜானகி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பிரபு மற்றும் சண்முகவள்ளிக்கு எந்த தொடர்பும் இல்லை, குழந்தை என்னிடம் தான் உள்ளது என்று நீதிபதியிடம் ஜானகி தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்ட நீதிபதி ஜானகியின் பதில் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதால் நீதிபதி, ஜானகியிடம் குழந்தையை காட்டுங்கள் என்று கூறியுள்ளனர்.

ஆனால் ஜானகி குழந்தையை காட்டாததால் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜானகி மீது உரிய விசாரணை நடத்தி குழந்தையை கண்டுபிடிங்கள் என திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமாருக்கு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
இதனை அடுத்து ஜானகியை தனிப்படை போலீசார் கடந்த 6ம் தேதி 8 பிரிவில் வழக்கு பதிவு செய்து நீதிபதியிடம் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.

மேலும் போலீசார் விசாரணையில் ஜானகிக்கு பிறந்த குழந்தையை வழக்கறிஞர் பிரபு மற்றும் சண்முகவள்ளி திருச்சி மாநகர் அரியமங்கலம் அடுத்து காட்டூர் பகுதியை சேர்ந்த கவிதா (சுய உதவி குழுவை சேர்ந்தவர்) என்பவர் மூலமாக குழந்தையை விற்றதாக பிரபு வாக்குமூலம் கொடுத்ததை அடுத்து வழக்கறிஞர் பிரபு, சண்முகவள்ளி கார் ஓட்டுநர் ஆகிய மூன்று பேரையும் கடந்த 9ம் தேதி கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் சுய உதவி குழுவை சேர்ந்த கவிதா போலீசார் விசாரணை செய்ததில் டெல்லியில் உள்ள கடத்தல் கும்பலுடன் தொடர்பு கொண்டு குழந்தையை பெற்றது தெரிய வந்தது.

இதனை அடுத்து டெல்லி சென்ற ஒரு தனிப்படை போலீசார் கடத்தல் கும்பல் முக்கிய குற்றவாளி கோபி என்கிற கோபிநாத்தை கடந்த 16ஆம் தேதி டெல்லியில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி விசாரணை செய்து வந்த நிலையில், டெல்லி தனியார் மருத்துவமனையில் பாக்யஸ்ரீ என்ற பெண் குழந்தை வேண்டி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதை தெரிந்து கொண்ட கோபிநாத் அந்த பெண்ணிடம் 5 லட்சம் ரூபாய்க்கு குழந்தையை விற்றுள்ளார்.

இதனை அடுத்து குழந்தையை வாங்கிய பெண்ணின் செல்போன் நம்பர் சிக்னலை வைத்து குழந்தை எங்கு இருக்கிறது என்று விசாரணையில் கர்நாடகா மாநிலத்தில் இருப்பதை தெரிந்து கொண்டு கர்நாடக மாநிலம் வெள்ளகவி மாவட்டம், உதியம்பாக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜென்னமா நகர் 3 மாடி குடியிருக்கும் பாக்கியஸ்ரீயிடம் இருந்த குழந்தையை மீட்டனர்.

இதனை அடுத்து கடத்தப்பட்ட குழந்தை, வளர்ப்பு தாய் பாக்கியஸ்ரீ, குழந்தை கடத்தல் கும்பல் முக்கிய குற்றவாளி கோபி என்கிற கோபிநாத்தையும் அழைத்துக் கொண்டு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதியிடம் ஆஜர் படுத்துவதற்காக வந்து கொண்டிருக்கின்றனர்.

போலீசாரின் விசாரணையில்குழந்தை கடத்தல் சம்பவத்தில் குழந்தை கடத்தல் தலைவியாக பெண் ஒருவர் இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர், அவர் யார் என்பது குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த குழந்தையை விற்பதற்காக தனிப்படை போலீசார் தீரன் படம் பாணியில் சுமார் 6000 கிலோ மீட்டர் பயணம் செய்து மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 491

0

0