பாம்பன் ரயில் பாலத்தில் ஏற்பட்ட சென்சார் பிரச்சனை: ஆய்வுப்பணி முடிந்த நிலையில் சோதனை ஓட்டம்…!!

Author: Aarthi
9 October 2020, 12:38 pm
pamban bridge - updatenews360
Quick Share

ராமேஸ்வரம் : பாம்பன் ரயில் பாலத்தில் சென்சார் பிரச்சனை சரிசெய்யப்பட்டு 22 பெட்டிகளுடன் ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடந்த 2ம் தேதி முதல் ராமேஸ்வரம் – சென்னை இடையே சேது எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது.

pamban-bridge2-updatenews360

இதனை தொடர்ந்து அக்டோபர் 3ம் தேதி பாம்பன் பாலத்தில் ரயில் செல்லும்போது ஏற்படும் அதிர்வுகளை அளவிடும் சென்சார் கருவியில் வழக்கத்திற்கு மாறான அளவீடு காட்டியதால், ரயில் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டது.

இதனால் சென்னை கோட்டத்தில் இருந்து வந்த பொறியாளர் குழுவினர் கடந்த 5 நாட்களாக பாம்பன் ரயில் பாலத்தில் தொடர் ஆய்வில் ஈடுபட்டனர். மேலும், பெங்களூர் ஐஐடி மற்றும் தெற்கு ரயில்வே நிர்வாகத்தை சேர்ந்த பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு நேற்று பாம்பன் பாலத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதையொட்டி ராமேஸ்வரத்திலிருந்து ஆட்கள் இல்லாத 22 பெட்டிகளுடன் புறப்பட்ட ரயில் பாம்பன் ரயில் பாலத்தின் மையப்பகுதியில் பலமுறை இயக்கப்பட்டு, சென்சார் கருவியில் ஆய்வு செய்யப்பட்டது.

சென்சார் கருவி காட்டும் அளவீடுகளின் அடிப்படையில் பிரச்னை எதுவும் இல்லாத நிலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுப்பணி முடிந்து, பாலத்தில் மீண்டும் பயணிகளுடன் ரயில் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்று பால பராமரிப்பு பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Views: - 83

0

0