கரணம் அடித்த கபடி வீரருக்கு அடுத்த நொடியில் காத்திருந்த அதிர்ச்சி : நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
16 August 2022, 11:31 am
Kabaddi Player Dead - Updatenews360
Quick Share

ஆரணி டவுன் பகுதியில் கோவில் திருவிழாவில் கபடி பயிற்சியில் ஈடுபட்டிருந்த கபடி வீரர் கரணம் அடிக்கும் போது மரணமடைந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் களத்துமேட்டு தெருவில் கடந்த 8ம் தேதி மாரியம்மன் கோவில் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது.

இதில் களத்துமேட்டு கே.எம்.எஸ். கபடி குழுவினர் கபடி போட்டிக்கான பயிற்சி மேற்கொண்டனர். அப்போது ஆரணி டவுன் களத்துமேட்டு தெருவை சேர்ந்த கபடி வீரர் வினோத்குமார் (வயது 34) என்பவர் கபடி பயிற்சி மேற்கொண்டார்

அப்போது, வினோத் குமார் கரணம் அடிக்கும் பயிற்சி மேற்கொண்ட போது மயங்கி விழுந்தார். உடனடியாக வினோத்குமார் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்கைக்காக அனுமதிக்கபட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தார்.சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தினால் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி கபடி வீரர் வினோத் மரணமடைந்தார்.

உயிரிழந்த வினோத்துக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர். கபடி வீரரான வினோத் கரணம் அடித்த போது மரணமடைந்த வீடியோ இணையத்தில் வெளியாகி காண்போர் நெஞ்சை பதற வைத்துள்ளது.

Views: - 180

0

0