திடீரென வந்த ஒற்றை யானை… 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றிய பெண்கள் ஓட்டம்!!

5 November 2020, 12:21 pm
elephant - Updatenews360
Quick Share

நீலகிரி : உதகை அருகே பெண்கள் 100 நாள் பணி மேற்கொண்டிருந்த போது, திடீரென வந்த காட்டு யானையால் பெண்கள் அலறியடித்து ஓடினர்.

நீலகிரி மாவட்டம் உதகை மசினகுடி அருகே உள்ளது வாழைத்தோட்ட கிராமம். இந்த கிராமம் முதுமலை புலிகள் காப்பகம் வெளி மண்டல வனப்பகுதியில் அமைந்துள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை வாழைத்தோட்ட கிராமத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட பெண்கள் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணியாற்றி வந்தனர்,

அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று பெண்கள் வேலை செய்யும் இடத்திற்கு நுழைந்ததால் பெண்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

சற்று நேரம் மக்களை பார்த்த அந்த யானை யாருக்கும் எவ்வித இடையூறும் செய்யாமல் சாலையைக் கடந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

Views: - 20

0

0