நல்ல பாம்பிடம் சீறிய நாய் : வீட்டிற்குள் நுழைய விடாமல் எஜமானிக்கு தூது விட்ட ருசிகர சம்பவம்!!
Author: Udayachandran RadhaKrishnan28 October 2021, 3:56 pm
கடலூர் : வீட்டிற்குள் நுழைய முயன்ற நல்ல பாம்பை கண்ட நாய் வீட்டிற்குள் நுழையாதவாறு குறைத்துக் கொண்டே எஜமாமரிடம் சிக்க வைத்த ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடலூர் சின்னகங்கணம்குப்பம் சேர்ந்த பிரியா என்பவர் வீட்டுக்குள் நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. வீட்டில் சுற்றுச்சுவர் பக்கவாட்டில் பாம்பு வந்ததை முதலில் அந்த வீட்டில் வளர்க்கப்படும் நாய் பார்த்தது.
வீட்டிற்குள் செல்ல விடாமல் நாய் பாம்பை பார்த்து குரைத்துக்கொண்டே இருந்தது. இதையடுத்து நாயின் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த ப்ரியா பாம்பை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனே பாம்பை தப்பிக்க விடாமல் பார்த்துக்கொண்டிருந்த பிரியா. பாம்புபிடி வீரருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் வரும்வரை பாம்பை தப்பிக்க விடாமல் செல்ல நாய் குரைத்துக் கொண்டே இருந்தது. பின்னர் விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் செல்வா பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தார்.
0
0