அப்பாவின் அரசு வேலை மீது ஆசை…மதுவில் விஷம் கலந்து கொன்று நாடகமாடிய கொடூர மகன்: விசாரணையில் வெளியான ‘திடுக்’ தகவல்..!!

Author: Rajesh
23 March 2022, 2:08 pm
Quick Share

புதுக்கோட்டை: கீரனூர் அருகே தந்தையின் அரசு பணிக்கு ஆசைப்பட்டு மகனே மதுவில் விஷம் கலந்து கொடுத்து நண்பருடன் இணைந்து தந்தையை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் திடீர் நகரைச் சேர்ந்தவர் கருப்பையா(59). இவர் கீரனூர் பேரூராட்சி அலுவலகத்தில் பல ஆண்டுகளாக துப்புரவு பணியாளராக அரசுப்பணியில் இருந்துள்ளார். இவரது மனைவி உயிரிழந்த நிலையில் கருப்பையாவும் அவரது மகன் பழனியும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

ஓய்வுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே... அரசு வேலைக்காக தந்தையை, மகனே கொன்ற  கொடூரம்! | son killed father for government job in puthukottai

மேலும் பழனிக்கு திருமணமாகி ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் அவரது மனைவியும் உயிரிழந்ததால் தற்போது அந்த குழந்தைகள் அவரது மனைவியின் தாயார் வீட்டில் வளர்ந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 19ம் தேதி காலை 6 மணிக்கு பேரூராட்சி அலுவலகம் முன்பு மயங்கிய நிலையில் கிடப்பதாக அவரது மகன் பழனிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பேரூராட்சி அலுவலகத்திற்கு விரைந்த பழனி கருப்பையாவை மீட்டு அருகில் இருந்த கீரனூர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

கருப்பையாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து, கீரனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துள்ளனர். மேலும், கருப்பையாவின் பிரேத பரிசோதனை அறிக்கையை மருத்துவர்கள் சமர்ப்பித்துள்ளனர்.

Pudukkottai District : தந்தையின் அரசு பணி மீது மோகம்... மதுவில் விஷம்  கலந்து தந்தையை கொன்ற மகன் கைது | Son arrested for killing father by mixing  poison with alcohol – News18 Tamil

அதில், கருப்பையாவிற்கு மதுவில் குருணை மருந்து கலந்து கொடுத்து, கழுத்தில் மிதித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால், மகன் பழனியிடம் காவல் துறையினர் விசாரித்துள்ளனர். விசாரணையில், பழனியும் அவரது நண்பன் ஆனந்தனும் கருப்பையாவை கொலை செய்து நாடகமாடிய விவரம் தெரியவந்துள்ளது.

துப்புரவு பணியில் இருக்கும்போதே தந்தை இறந்தால், அந்த பணி மகனுக்கு வழங்கப்படும் என்பதால் இருவரும் சேர்ந்து கருப்பையாவை கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர். கருப்பையாவை கொலை செய்வதற்காக மதுவில் குருணை மருந்து கலந்து கொடுத்து கொலை செய்துள்ளனர்.

மதுவை அருந்திய கருப்பையா, சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார். அதனை அடுத்து, அவர் உயிர் பிழைத்து விடுவாரோ என்ற அச்சத்தில்அவரது கழுத்தில் மிதித்து கொலை செய்துள்ளனர். இறந்தவரின் உடலை கீரனூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு முன்பே போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

விசாரணையில் இந்த விவரம் தெரிய வந்ததால், சந்தேக மரணம் என்பதை மாற்றி கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர் காவல் துறையினர். வேலைக்காக தந்தையை சொந்த மகனே கொலை செய்திருக்கும் சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Views: - 729

0

0