டாஸ்மாக் பூட்டை உடைத்து மது அருந்திய திருடன் : போதையில் வெளியே வரமுடியாமல் போலீசில் சிக்கிய சம்பவம்!!

18 July 2021, 12:12 pm
Tasmac Theft- Updatenews360
Quick Share

திருப்பூர் : டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து மதுபானங்களை குடித்துவிட்டு பணத்தை கொள்ளையடித்து விட்டு லாக்ரை உடைத்துக்கொண்டிருந்த திருடனை ரோந்து பணியில் இருந்த போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கால்நடை மருத்துவமனை எதிரே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல நேற்று இரவு ஊழியர்கள் விற்பனையான 3 லட்சத்து 97 ஆயிரத்து 900 ரூபாய் பணத்தை கடையில் இருக்கும் லாக்கரில் வைத்து பூட்டிவிட்டு, டேபிளில் உள்ள ட்ராவில் 15 ஆயிரம் ரூபாய் மட்டும் வைத்துவிட்டு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை அவிநாசி போலீசார் அவ்வழியாக வழக்கமான ரோந்து பணி மேற்கொண்ட போது டாஸ்மாக் கடைக்குள் சத்தம் வருவது கேட்டு உடனடியாக சென்று பார்த்தபோது டாஸ்மாக் கடையின் வெளி பூட்டு உடைக்கப்பட்டிருப்பதும் உள்ளே சத்தம் கேட்டதும் தெரியவந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரை ஒருவர் கல்லால் உடைக்க முயற்சித்து வந்தது கண்டு உடனடியாக அவரை பிடித்து போலீசார் விசாரித்ததில், அவர் கேரள மாநிலம் கப்பய்யன் குழம்பு பகுதியை சேர்ந்த ரிதேஷ்(வயது 29) என்பதும், பூட்டை உடைத்து மூவாயிரம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்களை குடித்துவிட்டு ஆதீத போதையால் வெளியில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து விட்டு வெளியேற முடியாமல் லாக்ரை உடைத்துக்கொண்டிருந்த போது கையும் களவுமாக சிக்கிக் கொண்டார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து 15 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

Views: - 308

0

0