லாரியை கடத்திய சென்ற திருடன் : விரட்டி சென்ற காவல்துறையின் அதிரடி காட்சி!!

22 November 2020, 12:51 pm
Trichy Lorry Theft - Updatenews360
Quick Share

திருச்சி : மணப்பாறை அரிசி ஆலையிலிருந்து லாரி கடத்தியவரை விரட்டி சென்று பிடித்த காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரிசி ஆலை நடத்துபவர் முத்த புடையான்பட்டியைச் சேர்ந்த நாகப்பன் (வயது 47).
இவர் தனது ஆலையில் நிறுத்தியிருந்த லாரியை திடீரென காணவில்லை.

இது குறித்து உரிமையாளர் நாகப்பன் மணப்பாறை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனிடையே திருடப்பட்ட லாரி அதிவேகமாக விராலிமலை பகுதியில் உள்ள பூதக்குடி சுங்கச்சாவடியை கடந்ததாகத் தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து மணப்பாறை போலீஸார் உதவியுடன் அரிசி ஆலை நிர்வாகிகள் லாரியை பின் தொடர்ந்தனர். இதற்கிடையே திருச்சி நகர் பகுதியான தாராநல்லூர் மாரியம்மன்கோயில் அருகே சென்ற லாரி ஒரு காரின் மீது மோதி நின்ற நிலையில் மணிகண்டம் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீஸார் பொதுமக்கள் உதவியுடன் லாரியை மீட்டு மணப்பாறை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதனிடையே லாரி ஓட்டுநர் காவலரை தாக்க முற்பட்ட போது, காவலர்கள் ஓட்டுநரை சரமாரியாக தாக்கினர். இந்த காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீஸார் வழக்கு பதிவு செய்து லாரியை திருடி சென்ற திருச்சி மேலகல்கண்டார்கோட்டை பகுதியைச் கோவிந்தராஜ் என்பவரது மகன் பிச்சைமணியை (வயது 43) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 26

0

0