கொட்டும் மழையிலும் மக்களுக்காக போக்குவரத்து காவலர் செய்த காரியம் : குவியும் பாராட்டு!! (வீடியோ)

17 November 2020, 5:10 pm
traffic- Updatenews360
Quick Share

வடகிழக்கு பருவமழை தொடங்கயிதில் இருந்து தொடர்ந்து தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

தமிழகத்தில் உள்ள பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் பேரிடர் மேலாண்மை துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், தொடர் மழையிலும் மக்களுக்காக சேவை செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார் தூத்துக்குடி போக்குவரத்து காவலர் முத்துராஜா. விடாது மழையிலும் அயராமல் உழைத்துக் கொண்டிருந்த முத்துராஜாவின் வீடியோ வலைதளங்களில் வைரலானது.

கொட்டும் மழையில் போக்குவரத்து சரி செய்த அவரின் கடமை உணர்ச்சியை பொதுமக்கள் பாராட்டி வீடியோ எடுத்து வலைதளங்களில் பதிவிட்டனர். இதையடுத்து வீடியோவை பார்த்த தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், போக்குவரத்து காவலர் முத்துராஜாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.