அசுர வேகத்தில் வந்த வேன்.. சினிமா காட்சிகளை மிஞ்சிய விபத்து : ஷாக் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
31 January 2023, 9:27 pm

நெல்லை அருகே வேன் கவிழ்ந்து 11 பேர் காயமடைந்தனர். வே ன் கவிழ்ந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி வாகைகுளம் என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் இன்று அதிகாலை விருதுநகர் மாவட்டம் சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு ஒரு வேனில் சென்றனர்.

கோவிலுக்கு சென்று விட்டு இன்று மாலை 5 மணி அளவில் திருநெல்வேலி மாவட்ட எல்லையான கங்கைகொண்டான் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென வேன் நிலை தடுமாறி பேரிகார்டுகள் மீது மோதி நடுரோட்டில் தலை குப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வேனில் இருந்த 11 பேர் படுகாயம் அடைந்தனர் விபத்து குறித்து தகவல் அறிந்த கங்கைகொண்டான் போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

முதல் கட்ட விசாரணையில் வேன் டிரைவரின் அசுர வேகமே விபத்துக்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது.

https://vimeo.com/794535593

இந்நிலையில் நடு ரோட்டில் வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  • shankar have no other films than indian 3 movie ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே