தொடர்ந்து 100 அடி நீர்மட்டத்தில் பவானிசாகர் அணை: விவசாயிகள் மகிழ்ச்சி

Author: Aarthi
5 October 2020, 9:12 am
bavani dam - updatenews360
Quick Share

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 100 அடியை தாண்டி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி.

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் கேரளா மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து உள்ளது. நேற்றைய நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 100.33 அடி, அணைக்கு வினாடிக்கு 928 கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டது.

பவானிசாகர் அணையின் நீர் இருப்பு 29.6டிஎம்சி ஆகவும், அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 2,300 கனஅடியாகவும் உள்ளது.

இதனைதொடர்ந்து, இன்று காலை நேர நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 101.16 அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 924 கனஅடியாக உள்ளது. நீர் இருப்பு 29.6 டிஎம்சி ஆக உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக 3,150 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

தொடர்ந்து பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டிய நிலையில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Views: - 47

0

0