ஓடும் அரசு பேருந்தின் சக்கரம் கழன்று சாக்கடையில் விழுந்ததால் பரபரப்பு.. பயணிகள் அலறல் ஷாக் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
3 June 2024, 12:41 pm

திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை வேப்பன் வலசிற்கு செல்லும் நகர பேருந்து 16 ம் எண் கொண்ட பேருந்து ,TN57 N 1286 , 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு வேப்பன்வலசு அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது பேருந்தின் முன் இடதுபுற சக்கரம் கழன்று சென்று வீடுகளின் அருகே இருந்த பெரிய சாக்கடையில் விழுந்தது. இதனால் பேருந்து சென்று கொண்டிருக்கும்போதே சக்கரம் கழன்றதில் நிலை தடுமாறியதில் பயணிகள் கூச்சலிட்டு அலறினர் .

மேலும் படிக்க: பக்தர்களின் மனங்களை கவர்ந்த பூசாரியின் பணி நிறைவு.. கோவை தண்டுமாரியம்மன் கோவிலில் பாராட்டு விழா!

ஓட்டுநர் சாமர்த்தியத்தால் பேருந்தை நிறுத்தியதால் பயணிகளின் உயிர் தப்பினர். பழனி அருகே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து முன் சக்கர கழன்றதில் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிமன்ற உத்தரவின்படி அனைத்து பேருந்துகளும் ஆய்வு செய்யப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!