மகளிடம் அத்துமீறிய கணவனை சுத்தியலால் அடித்து கொன்ற மனைவி : சென்னை அருகே பகீர் சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 ஜனவரி 2022, 9:21 மணி
Daughter Harassed By Father- Updatenews360
Quick Share

சென்னை : குடிபோதையில் பெற்ற மகளிடமே தவறாக நடக்க முயன்ற கணவரை சுத்தியால் அடித்து கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஓட்டேரி வாழைமா நகரில் வசித்து வரும் பிரதீப் (வயது 43) என்பவருக்கு பிரீத்தா என்ற மனைவியும், ஸ்ரீகீர்த்தி, கௌதம் என இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடிபோதைக்கு அடிமையான பிரதீப் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் மனைவியுடன் தகராறு செய்வது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று இரவு வழக்கம் போல் மது அருந்தி விட்டு போதையில் வீட்டிற்கு வந்த பிரதீப் தனது மகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

கீர்த்தியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தாய் பிரீத்தா தனது கணவரிடம் இருந்து மகளை மீட்க போராடியுள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த பிரீத்தா வீட்டில் இருந்த சுத்தியை எடுத்து கணவர் பிரதீப் மண்டையில் ஓங்கி அடித்தார். இதில் சம்பவ இடத்திலேயே பிரதீப் உயிரிழந்தார்.

தகவலை அறிந்து வந்த ஓட்டேரி போலீசார் பிரதீப் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரீத்தாவை கைது செய்து, பாதிக்கப்பட்ட மகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • TVK Vijay விஜய் கட்சியில் இணையும் முன்னாள் ஐஏஎஸ்? புதிய சர்கார் அமைக்குமா தமிழக வெற்றிக் கழகம்?!
  • Views: - 2608

    0

    0