போலீஸ் காலில் விழுந்து கதறிய பெண்.. திடீரென தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
3 April 2023, 6:41 pm
Suicide Attempt - Updatenews360
Quick Share

வேலூர் மாவட்டம் பாகாயம் அடுத்த சஞ்சீவிராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி செல்வி வயது 30. இவரது மகள் வேலப்பாடியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சிறுமி கடந்த டிசம்பர் மாதம் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபருடன் வீட்டை விட்டு வெளியேறி சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் தாயார் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி வேலூர் ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் அரங்கம் முன்பு சிறுமியின் தாயார் செல்வி, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி இன்று தீக்குளிக்க முயற்சி செய்தார்.

அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் செல்வி மீது தண்ணீரை ஊற்றி அவரை சமாதானம் செய்தனர். பின்னர் அந்தப் பெண் மாவட்ட வருவாய் அலுவலர் ராம மூர்த்தியிடம் மனு அளித்தார்.

மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் மனு மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு பரிந்துரை செய்தார். பெண் தீ குளிக்க முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 258

0

0