மணல் கடத்தும் ஊராட்சி மன்ற தலைவர்..? அனைத்திலும் ஊழல்? ஒன்று சேர்ந்த 8 கவுன்சிலர்கள்… பரபரப்பு புகார்!!!

Author: Udayachandran RadhaKrishnan
3 April 2023, 5:46 pm
Councilor - Updatenews360
Quick Share

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி விரிஞ்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் குணசுந்தரி பாலசந்தர் இருந்து வருகிறார்.

கணவர் பாலச்சந்தர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் இவர் மூலம் கவுன்சிலர்களை மிரட்டுவதாகவும் மன்ற கூட்டத்தை குறித்து தகவல் சொல்வதில்லை என்றும் குற்றஞ்சாட்டு கின்றனர்.

மொத்தம் 12 வார்டுகள் உள்ள இந்த ஊராட்சி மன்றத்தில் இன்று எட்டு வார்டு கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் சரிவர சப்ளை செய்வதில்லை என்றும் குப்பைகளை சரியாக வாருவதில்லை என்றும் தட்டி கேட்டால் உங்களுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று எடுத்துதெறிந்து பேசுவதாகவும் தீர்மான புத்தகத்தை யாரிடமும் காட்டுவதில்லை என்றும் அவர்களே நிரப்பி கொள்வதாகவும் குற்றம் சாட்டினர்.

மேலும் செய்யப்படாத பணிகளை வேலை செய்ததாக காட்டி பணத்தை கையாடல் செய்திருப்பதாகவும் தங்களது புகாரில் தெரிவித்துள்ளனர்.

வேளாண் மேம்பாட்டிற்காக தமிழக அரசு மூலம் கொடுக்கப்பட்ட டிராக்டரை தன் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தி அதன் மூலம் மணல் கடத்தி அது தற்போது மணல் கடத்திய ட்ராக்டர் என்று லத்தேரி காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு போட்டு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
டிராக்டர் வாங்கி ஒரு வருடம் கழிந்த நிலையிலும் இன்று வரை அது ஆர்டிஓ வில் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆயிரம் ரூபாய்க்கு பணி செய்தாலும் அதன் மீது பத்தாயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை பணி செய்ததாக கூறி அதிகப்படியான பணத்தை எடுப்பதாகவும் ஏன் அவ்வாறு செய்கிறீர்கள் என கேட்டால் அதிகாரிகளுக்கு எல்லாம் பணம் தரவேண்டி உள்ளது ஆகவே தான் அதை எடுக்கிறோம் என்று கூறியுள்ளதாக புகாரில் தெரிவித்துள்ளனர்.

இறைவன் காடு பகுதியில் அமைந்துள்ள தனியார் பால் தயாரிப்பு தொழிற்சாலையில் இருந்து வரும் கழிவு நீர் மற்றும் விரிஞ்சிபுரம் சுடுகாட்டு பகுதியில் மழை நீர் வெள்ளம் வந்த போது சுடுகாட்டில் இருந்து அடித்துச் செல்லப்பட்ட பிணங்கள் அந்த கிணற்றில் தான் குவிந்துள்ளதாகவும் ஆகவே அந்த கிணற்று நீரை குடிப்பதற்காக பயன்படுத்தக் கூடாது என்றும் மேலும் குடிப்பதற்கு தகுதியற்ற தண்ணீர் என்று ஆய்வு செய்து வழங்க கூடாது என்று உத்தரவிடப்பட்ட கிணத்து குடிநீரை சப்ளை செய்து வந்ததால் அனைவருக்கும் உடல்நிலை கோளாறு ஏற்பட்டிருப்பதாகவும் அதனால் அது உடனடியாக மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இது போன்ற மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை கோரி மனு அளித்தனர். மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் இடம் இது குறித்து விசாரிக்க உத்தரவிட்டார்.

Views: - 300

0

0