சாலை விபத்தில் உயிர் தப்பிய பெண்! மறுநாள் காத்திருந்த அதிர்ச்சி!!

24 October 2020, 5:08 pm
woman Dead - Updatenews360
Quick Share

கோவை : சாலை விபத்தின் போது பாம்பு கடித்ததை அறியாத பெண் தாமதமாக சிகிச்சை பெற்றதால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அடுத்த சூலூர் காடம்படி ராயபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 54).விசைத்தறி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா(வயது 38).கடந்த இரு தினங்களுக்கு முன் மனைவியை அழைத்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டு இருந்தபோது சாலையின் குறுக்கே பாம்பு ஒன்று சென்றுள்ளது.

இதனை கண்ட தங்கராஜ் பிரேக் அடித்ததில் கணவன் மனைவி இருவரும் தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது சாலையின் குறுக்கே சென்ற பாம்பு கவிதாவை கடித்து உள்ளது. பாம்பு கடித்தது தெரியாமல் கீழே தவிறி விழுந்த கவிதாவும் அவரது கணவரும் எழுந்து வீட்டிற்கு சென்றுள்ளனர்.

மறுநாள் காலை கவிதாவிற்கு கையில் கடுமையான வலி ஏற்பட்டது. கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டு இருக்கலாம் என கருதி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கவிதாவின் கையில் விஷபாம்பு கடித்து உள்ளதாக தெரிவித்து முதலுதவி செய்த பின்னர் மேல் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தி உள்ளனர்.

உயிரிழந்த கவிதா

இதனையடுத்து கவிதா கோவை அரசு மருத்துவமனயில் சேர்க்கபட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள சூலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 41

0

0