14 வயது சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை : தனியாக குடித்தனம் நடத்திய காமேஷ் கைது!!

Author: kavin kumar
11 January 2022, 1:47 pm
Quick Share

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே 14 வயது சிறுமியை வன்கொடுமை செய்த இளைஞன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சிவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் கடந்த 8-ஆம் தேதியன்று திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இதில் அச்சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் 18 வயது நிறைவடையாத தகவலை மருத்துவமனை நிர்வாகம் ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தது. பின்னர் இதுகுறித்து மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில் இச்சிறுமி திருவள்ளூர் மாவட்டம் நரசிங்கபுரம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்று வந்ததும்,

அப்போது சிவபுரம் கிராமத்தை சேர்ந்த காமேஷ் (25) என்கிற இளைஞர் சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்ச்சி செய்ததில் அச்சிறுமி நிறைமாத கர்ப்பம் ஆனது தெரியவந்தது. இதையடுத்து இருவருக்கும் திருமணம் செய்து வைத்து அதே பகுதியில் தனி குடுத்தனம் நடத்தி வந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தலைமறைவான காமேஷை ஸ்ரீபெரும்புதூர் மகளிர் போலீசார் கைது செய்தனர்.மேலும் காமேஷ் இடம் விசாரணை நடத்தியதை அடுத்து அவர் மீது போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிந்து ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 249

0

0