உயிரிழந்தும் வாழும் மனிதம் : 8 பேருக்கு மறுவாழ்வு அளித்த சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞர்.. நெகிழ்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 September 2022, 4:36 pm
Organ Donation - Updatenews360
Quick Share

விழுப்புரம் : விக்கிரவாண்டியில் சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டு எட்டு பேரில் மறுவாழ்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள கக்கனூரை சேர்ந்தவர் சந்தோஷ்(வயது 33) . கூலித்தொழிலாளியான இவர் தனது மனைவி புவனேஸ்வரி மற்றும் ஒரு வயது பெண் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 7ம் தேதி விழுப்புரத்தில் இருந்து தனது இருச்சக்கர வாகனத்தில் கக்கனூர் நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் போது அவரது இருச்சக்கர வாகனம் மீது எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தூக்கிவீசப்பட்ட சந்தோஷ் சுயநினைவில்லாத நிலையில் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் மூளை சாவு அடைந்து விட்டதாக மருத்துவரகள் தெரிவித்தனர்.

அதனையெடுத்து சந்தோஷ் யின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது மனைவியும் பெற்றோர்களும் விருப்பம் தெரிவித்ததன் பேரில் இன்று அதிகாலை முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் சந்தோஷின் இதயம், கல்லீரல், இரண்டு சிறுநீரகம், இரண்டு நுரையீரல் இரண்டு கருவிழிகள் ஆகியவைகள் அகற்றப்பட்டது.

அந்த உறுப்புக்கள் சென்னை மற்றும் திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு 8 பேருக்கு மறு வாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மூளைச்சாவு அடைந்ததை தொடர்ந்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதன்முறையாக மருத்துவ குழுவினரால் அவரின் உடல் உறுப்பான இதயம், கல்லீரல், சிறுநீரகம், இரண்டு கருவிழிகள், இரண்டு நுரையீரல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

இந்த குடும்பத்தினர்க்கு உடல் உறுப்புக்கான சான்றிதழ் மாவட்ட ஆட்சியர் மோகன் வழங்கினார் அப்பொழுது எஸ்.பி ஸ்ரீநாதா, டீன் குந்தவிதேவி, மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.

இறந்த பின்பும் தனது உடல் உறுப்புகள் மூலம் 8 பேரின் உயிரில் கலந்து மனித வாழ்வு மகத்தான வாழ்வு என்பதை நிரூபித்துள்ளது இளைஞரின் மரணம்.

Views: - 125

1

0