முதியவரை கொலை செய்து சாக்கில் கட்டி சமையலறையில் பதுக்கி வைத்த இளைஞர் : திருப்பூர் அருகே பயங்கரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 August 2021, 2:42 pm
Murder Youth Escape -Updatenews360
Quick Share

திருப்பூர் : நிலத்தகராறில் முதியவரை கட்டையால் அடித்து கொலை செய்த வாலிபர் சடலத்தை சாக்கில் கட்டி வைத்து தலைமறைவானவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்து சேயூர் அருகே இராமியம்பாளையம் கிராமம் வடக்குத் தெரு பகுதியை சேர்ந்த முதியவர் வெங்கடாசலம் (வயது 80). ஆடு வளர்ப்பு மற்றும் விவசாயம் செய்து வரும் இவர், தனது சகோதரி பொன்னம்மாளுடன் (வயது 75) வசித்து வருகிறார்.

இவரது வீட்டிற்கு பின்பக்கத்து வீட்டில் சுசீலா (வயது 45) என்பவர் தனது மூத்தமகன் மனோஜ்குமார் (வயது 31), மருமகள் ரம்யா (வயது 28), மகன் சந்தோஷ் (வயது 28) ஆகியோருடன் வசித்து வருகிறார்.
டெய்லராக வேலை செய்து வரும் சந்தோஷ்-ற்கு இன்னும் திருமணமாகவில்லை. சந்தோஷ்க்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த முதியவர் வெங்கடாசலத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு குடிபோதையில் வந்த சந்தோஷ்-ற்கும் முதியவர் வெங்கடாசலத்திற்கும் இடையே நிலத்தகராறு குறித்து வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சந்தோஷ் கட்டையால் முதியவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து பயந்து போன சந்தோஷ் உடனடியாக முதியவரை இழுத்து வந்து தனது வீட்டு சமையலறையில் சாக்கு மூட்டையாக கட்டி வைத்து விட்டு தப்பியோடியுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேயூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி, வழக்கு பதிவு செய்து, தலைமறைவான சந்தோஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Views: - 718

0

0