தூக்கிடுவதுபோல செல்ஃபி : பரிதாபமாக உயிரை இழந்த இளைஞர்..!

13 September 2020, 1:40 pm
Quick Share

தூக்கிடுவதுபோல் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பொம்மிநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் திரவியம். செல்ஃபி பிரியரான இவர், ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இவர் புதுவயல் பகுதியில் நடந்துகொண்டிருக்கும் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்காக அங்கு ஒரு அறை எடுத்து தங்கி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை வேலைக்கு செல்வதற்கு முன்பு செல்ஃபி எடுக்க முயன்ற அவர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வதுபோல் புகைப்படம் எடுத்துள்ளார்.

அதனை தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். இதனை தொடர்ந்து எதிர்பாரா விதமாக மீண்டும் செல்ஃபி எடுக்க முயன்றபோது கழுத்தில் மாட்டி இருந்த கயிறு அவரின் கழுத்தை நெறித்து எதிர்பாரா விதமாக பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திரவியத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது. செல்ஃபி எடுக்க முயன்று இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 8

0

0