விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் ‘மர்ம மரணம்‘: இரு காவல் உதவி ஆய்வாளர்கள் சஸ்பெண்ட்!!
19 September 2020, 5:37 pmமதுரை : உசிலம்பட்டி பேரையூர் அருகே விசாரணைக்கு அழுத்து செல்லப்பட்ட வாலிபர் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே அனைக்கரைப்பட்டி – வாழைத்தோப்பு பகுதியில் செப்-16 ஆம் தேதி இரவு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரமேஷ் என்ற வாலிபர் செப்-17 ஆம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் மர்மான முறையில் மரணமடைந்தது தொடர்பாக உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந் நிகழ்விடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்த மதுரை எஸ்.பி. சுஜித்குமார் சம்பந்தப்பட்ட சாப்டூர் காவல் உதவி ஆய்வாளர் ஜெயக்கண்ணன், காவலர் புதியராஜா உள்ளிட்ட நான்கு காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உசிலம்பட்டி கோட்டாச்சியர் ராஜ்குமார் விசாரணை நடத்த உத்தரவிட்டதன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டு உடலை உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு உடல் புதைக்கப்பட்டுவிட்ட சூழலில்.
மர்ம மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட எஸ்.ஐ. ஜெயக்கண்ணன் மற்றும் காவலர் புதியராஜா உள்பட நான்கு போலிசாரை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் உதவியுடன் ரமேஷின் உறவினர்கள் சுமார் ஆயிரக்கணக்கானோர் அனைக்கரைப்பட்டி கிராமத்தின் மையப்பகுதியில் முகாமிட்டு மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில சாப்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் பரமசிவம் மற்றும் ஜெயக்கண்ணன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.