தமிழகத்தில் திரையரங்குகளை உடனே திறக்க வேண்டும் – விக்கிரமராஜா கோரிக்கை..!

11 September 2020, 2:50 pm
Quick Share

தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது. இந்த சூழலில், சிறு குறு தொழிலாளர்கள், வணிகர்கள் என பலதரப்பட்ட துறைகளை சேர்ந்த மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆக்ஸ்ட் 31ஆம் தேதியுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில் செப்-1ஆம் தேதி முதல் பல்வேறு தளர்வுகளுடன் நான்காம் கட்ட பொது முடக்கம் அமலுக்கு வந்தது. இதில் இ.பாஸ் ரத்து, கடைகள் திறப்பு, பேருந்து, ரயில்கள் இயக்கம் உள்ளிட்டவை இடம்பெற்றன.

ஆனால் மக்கள் கூட்டம் கூடும் பொதுக்கூட்டங்கள், திரையரங்குகள் திறக்க தற்போதுவரை எவ்வித அறிவுப்பும் வெளியாகவில்லை. இதனால், தமிழகத்தில் மட்டுமே பல கோடி ரூபாய் மதிப்பில் தயாராகி உள்ள படங்கள் திரையிட முடியாமல் இருக்கிறது.

இதனால், திரைப்படம் தொடர்பான துறையை சேர்ந்த அனைத்து தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், திரையரங்குகளை திறக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், இன்று கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்த வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, தமிழகத்தில் திரையரங்குகளை உடனே திறந்தால்தான் அதை நம்பியுள்ள வணிகர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாது என்பதை கோரிக்கையாக வைத்து மனு அளித்துள்ளார்.

Views: - 0

0

0