தியேட்டர்கள் திறப்பு குறித்து செப்.,1ம் தேதி தெரிய வரும் : அமைச்சர் கடம்பூர் ராஜு
22 August 2020, 4:21 pmகொரோனா அச்சுறுத்தலால் மூடி வைக்கப்பட்டுள்ள திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து செப்.,1ம் தேதி முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 5 மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், சில தளர்வுகள் மற்றும் அளிக்கப்பட்டுள்ளது. அதிலும், பொழுது போக்கான திரையரங்கு உள்ளிட்டவற்றிற்கு மத்திய அரசு இதுவரை அனுமதியளிக்கவில்லை.
இந்த நிலையில், அச்சுறுத்தலால் மூடி வைக்கப்பட்டுள்ள திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து செப்.,1ம் தேதி முடிவு செய்யப்படும் என்று தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய அரசு அறிவிக்கும் வழிகாட்டுதல்களின்படி, தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்படும் எனவும் அவர் கூறினார்.