தாளவாடி அருகே பழமை வாய்ந்த கோவில் உண்டியலை உடைத்து திருட்டு : கைரேகை நிபுணர்கள் ஆய்வு!!

22 July 2021, 8:11 pm
Temple Theft -Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சாமுண்டீஸ்வரி கோவில் உண்டியல் திருட்டு வழக்கில் கைரேகைகள் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி ஒங்கன்புரம் கிராமத்தில் லிங்காயத்து சமுதாய மக்கள் வணங்கி வரும் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சாமுண்டீஸ்வரி திருக்கோயில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் இன்று காலை மரக்கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கோவிலின் உள்ளே இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கோவில் பூசாரி நாகராஜப்பா கொடுத்த புகாரின் அடிப்படையில் தாளவாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை கொண்டு பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து‌ விசாரணை செய்து வந்த நிலையில் இன்று மாலை ஈரோட்டில் இருந்து கைரேகை நிபுணர்களை வரவழைக்கப்பட்டு‌ திருடிச் சென்ற நபர் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

Views: - 128

0

0