கொரோனா இறப்பை குறைத்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்..!!

3 July 2021, 10:38 am
Radhakrishnan- Updatenews360
Quick Share

சென்னை : வரும் மாதங்களில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி, சமீப நாட்களாக தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.

இந்நிலையில், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வரும் மாதங்களில் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொது இடங்களில் மக்கள் எச்சில் துப்ப கூடாது. மக்கள் வெளியே வரும்போது முகக்கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா இறப்பு எண்ணிக்கையை தமிழ்நாடு அரசு மறைக்கவில்லை என்றும், டெங்குவை எப்படி ஒழித்தோமோ, அதேபோல் கொரோனாவை ஒழிக்க செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Views: - 98

0

0