பொதுக்குழு நடத்தி பொதுச்செயலாளர் தேர்வு செய்ய விதி கிடையாது : பைலாவை திருத்தலாம், உயிலை திருத்த முடியாது…முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
4 July 2022, 6:26 pm
Admk Former minister Krishnan - Updatenews360
Quick Share

திருச்சி : மறைந்த எம்ஜிஆர் உயிலின் படிதான் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் கு.பா.கிருஷ்ணன் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்பொழுது ஒற்றை தலைமை பிரச்சனை சூடு பிடித்து ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தனித்தனியாக அறிக்கையட்டும் வழக்குகளை தொடர்ந்தும் பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திமுகவிலிருந்து எம்ஜிஆர் வெளியே வந்தா காலத்தில் இருந்து தொடர்ந்து அதிமுகவில் பயணித்து எம்ஜிஆர் உடனும் அதை தொடர்ந்து ஜெயலலிதாவின் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றிய மூத்த அரசியல்வாதி கு.பா.கிருஷ்ணன்.

இன்று திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அதிமுகவில் நடைபெறுகிற அனைத்து நிகழ்வுகளும் என்னை பெரிதும் வாட்டுகிறது. இந்த இயக்கம் அழிவதைக் கண்டு வளர்த்தவர்களுக்குத் தான் துன்பம் தெரியும். எம்ஜிஆர் முதன் முதலாக திண்டுக்கல் இடைத்தேர்தலில் போட்டியிடும் பொழுது நான் அவரோடு பணியாற்றியுள்ளேன். அவர் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அவரோடு பயணித்துள்ளேன். என்னோடு இருந்த தோழர்கள் 90 விழுக்காடு மறைந்து விட்டனர். எஞ்சிய கிழவன் நான் மட்டுமே இருக்கிறேன்.

நான் வாழும் வரை இந்த இயக்கத்தை கட்டி பாதுகாக்க வேண்டிய பொறுப்பு என்னிடத்தில் உள்ளது. ஜெயலலிதா இந்த இயக்கத்தை நடத்த முற்பட்ட பொழுது திருச்சி மாவட்டத்திலிருந்து ஆதரவு தெரிவித்த ஒரே ஒரு பொதுக்குழு உறுப்பினர் நான் மட்டும்தான்.

அவர் இறந்ததற்குப் பின்னால் இரட்டை தலைமை வந்தது நான் மகிழ்ச்சி அடைந்தேன். என்றாவது ஒரு தொண்டன் தலைமையேற்று நடத்துவான் என்று சொன்னால் அன்றுதான் ராமச்சந்திரன் ஆத்மா சாந்தி அடையும் என்று சொன்னார். அதை நினைவு கூர்ந்து இரண்டு தொண்டனும் இரட்டைத் தலைமையில் இருப்பதை ஏற்று நான் சந்தோஷப்பட்டேன்.

இரட்டை தலைமை முடிவு செய்து நீங்களே. இரட்டைத் தலைமை ஏற்படுத்திப் பின்பு தற்போது ஒற்றை தலைமை வேண்டும் என்று ஒருவனை வெளியே போடா என்று சொல்வது நியாயமா. ஏன் உங்களுக்குள் இந்த கசப்புணர்ச்சி. இன்றைக்கு இந்த பிரிவினைக்கு என்ன காரணம்.

சசிகலாவை பொதுச் செயலாளர் ஆக்கியது யார் அம்மாவுடைய சமாதியில் தீர்மானம் போட்டது யார். இந்த பொதுச் செயலாளர் பதவி காலியாகவே இருக்கும். அதனால்தான் நாங்கள் இரட்டைத்தலமை என்று வைத்துக் கொண்டோம் என்ன சொன்னீர்கள் தற்பொழுது ஒற்றைத் தலைமை வேண்டும் என கூறுகிறீர்கள். ஒற்றை தலைமை என்பதை வரவேற்கிறேன். ஆனால் ஒற்றைத் தலைமை என்பது பொதுகுழுவால் தேர்ந்தெடுக்க படக்கூடாது.

எம்ஜிஆர் தனது உயிலில் இந்த கட்சி என்றாவது ஒரு நாள் பிளவுபடும் என சொன்னால் 80சதவீதம் ஆதரவுக்கு யாருக்கு இருக்கிறதோ அவர் பொதுச் செயலாளராக கட்சி அவரிடத்தில் இருக்கலாம் என சொன்னார்.

எம்ஜிஆர் உயிலின் படி தான் ஜெயலலிதா பொதுச்செயலாளராக போட்டியிட வந்தார். அவருக்கு எதிராக யாரும் போட்டியிடவில்லை எனவே அவர் பொதுச் செயலாளராக வந்து கொண்டிருந்தார். கட்சியில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கின்றனர்.

எத்தனை தொண்டன் வேண்டுமானும் நிற்கட்டும் முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும். எல்லா உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும், ஓட்டு போடும் உறுப்பினர்களின் லிஸ்ட் ஐ வெளியிடட்டும். நீதிமன்றம் தேர்தல் நடத்தட்டும். ஓபிஎஸ், இபிஎஸ் எம்ஜிஆரின் உயில்படி தேர்தலை சந்திக்கட்டும்.

பொதுக்குழு மூலமாக பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்க முடியாது. பொதுக் குழுவில் விதியை மாற்ற முடியாது. கட்சியின் பைலாவை திருத்தலாம், ஆனால் உயிலை திருத்த முடியாது. அதை நடைமுறைப்படுத்துவதற்கு நீதி அரசர் பரந்தாமன் உள்ளார் என தெரிவித்தார்.

Views: - 244

0

0