எடப்பாடி பழனிசாமியை கண்டு பயம்… அதனால் தான் கூட்டணியே அமைத்தார்கள் : கடம்பூர் ராஜூ கடும் விமர்சனம்!!
Author: Udayachandran RadhaKrishnan17 May 2023, 6:55 pm
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இடை சேவல் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பில் வாறு கால் மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
மேலும் அப்போது மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார். பின்னர் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ செய்தியாளரிடம் கூறுகையில், விழுப்புரம், மரக்காணம், செங்கல்பட்டு ,உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயத்தால் 22 குடும்பங்கள் இன்று நிற்கதியாக ஆதரவற்று இருக்கின்றனர்.
காவல்துறை கண்துடைப்பிற்காக கள்ளச்சாராயம் அல்ல விஷ சாராயம் என்று ஒரு அறிக்கை விட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது.
கள்ளச்சாராயத்தை தடுக்கும் விவகாரத்தில் காவல்துறை செயலிழந்து விட்டது முன்கூட்டியே கள்ளச்சாராயத்தை தடுக்க தவறவிட்டதாலேயே இந்த உயிரிழப்பு.
40 ஆண்டுகளுக்குப் பிறகு விஷச்சாராயத்தால் உயிரிழந்ததற்கு காரணம் காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர்தான் முழு பொறுப்பேற்க வேண்டும்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டு பயந்து தான் ஓபிஎஸ் டிடிவி இணைந்துள்ளார்கள்.
ஓபிஎஸ் டிடிவி தினகரன் மாறி மாறி துரோகிகள் என்று கூறிக்கொண்டு இன்று அவர்கள் இணைந்து கொண்டு அடுத்தவர்களை பற்றி அவர்கள் பேச அருகதை இல்லை.
ஒ.பி.எஸ் டி.டி.வி தினகரன் சந்திப்பைக் கண்டு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பயப்பட வேண்டிய அவசியம் இல்லை அதிமுக என்ற மாபெரும் மக்கள் இயக்கம் அவர் பின்னால் உள்ளது.
மதுரையில் நடைபெறும் மாநாடு, உறுப்பின சேர்க்கை, வாக்குச்சாவடி முகவர்கள் உள்ளிட்டவை குறித்து இன்று நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
தமிழக டாஸ்மாக்கில் போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதை நாங்கள் சட்டப்பேரவையில் பலமுறை கூறி அலுத்துப் போய் விட்டோம்.
இவ்விவகாரத்தில் அரசு தெரிந்தே செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறோம் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
0
0