குடிபோதையில் தவறி விழுந்த சகோதரர்கள்… உதவிய ஊர்க்காவலர்கள் மீது தாக்குதல் ; வீடியோ வைரலானதால் வந்த வில்லங்கம்..!!

Author: Babu Lakshmanan
24 May 2024, 2:46 pm
Quick Share

திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து வழுக்கி விழுந்த அண்ணன் தம்பி இருவரை தூக்கிவிடச் சென்ற ஊர்க்காவலர்கள் 2 பேரை அடித்து, எட்டி உதைத்த போதை ஆசாமிகள். வைரலாக பரவும் வீடியோ

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகரப் பகுதியை சேர்ந்தவர்கள் ஊமையன் என்கிற விஜயன் (24) மற்றும் அவரது அண்ணன் தாமரைக்கண்ணன் (26). பூக்கடையில் வேலை செய்யும் இவர்கள் இருவரும், அண்ணா சிலை அருகே மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்துள்ளனர்.

மேலும் படிக்க: தூக்கத்தில் இருந்து எழுந்திருங்க…கூட்டணி கட்சி-னு பார்க்காமல் தமிழக உரிமையை காப்பாற்றுங்க ; இபிஎஸ் அழுத்தம்

மழை பெய்து ரோடு ஈரமாக இருந்த நிலையில், கூட்டத்தைக் கண்டு பிரேக் அடித்தபோது வழுக்கி விழுந்துள்ளனர். இதனைப் பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊர்க்காவல் படையைச் சேர்ந்த நரேந்திர அர்ஜுன், முகிலன் ஆகியோர் அவர்களை தூக்கி விட்டு உதவி செய்துள்ளனர். அப்போது, விஜயன் மற்றும் தாமரைக்கண்ணன் இருவரும், ஊர்க்காவல்படையினரை அடித்து காலால் உதைத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து திருச்செங்கோடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

அண்ணன் தம்பி இருவரும் குடிபோதையில் இருந்ததாகவும், குடி போதையில் வேகமாக வாகனத்தை ஓட்டியது ஏன் என தட்டிக் கேட்டபோது வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டதாகவும், சம்பவத்தை பார்த்த சிலர் தெரிவித்தனர்.

Views: - 217

0

0