ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி ! சோதனைச்சாவடியில் சிக்கியது.!

2 August 2020, 2:12 pm
Andhra Ration Rice - Updatenews360
Quick Share

திருப்பத்தூர் : ஆம்பூர் அருகே ஆந்திராவுக்கு 15 டன் ரேஷன் அரிசி கடத்தி சென்ற லாரியை மாவட்ட எல்லைச் சோதனை சாவடி அருகில் வருவாய்துறையினர் பறிமுதல் செய்த நிலையில் லாரி ஓட்டுநர் தப்பியோடினார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் வேலூர் — திருப்பத்தூர் மாவட்ட எல்லை சோதனைச்சாவடி வழியாக ஆந்திராவிற்கு லாரி மூலம் ரேஷன் அரிசி கடத்தி வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உத்தரவின்பேரில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் மாதனூர் அருகே உள்ள மாவட்ட எல்லை சோதனை சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் .

அப்போது அவ்வழியாக வந்த லாரி நிற்காமல் சென்றதையடுத்து திருப்பத்தூர் தனி வட்டாட்சியர் குமார் தலைமையிலான வருவாய்துறை மற்றும் காவல் துறையினர் லாரியை பிடிக்க முற்பட்ட போது லாரி ஓட்டுனர் லாரியை தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி விட்டு தப்பியோடியுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் வட்டாட்சியர் பத்மநாபன் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து 15 டன் ரேஷன் அரிசி மூட்டைகளோடு பறிமுதல் செய்யப்பட்ட லாரியை ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் கீழ்முருங்கை பகுதியில் உள்ள தமிழ்நாடு வாணிப உணவுப்பொருள் கிடங்கில் ஒப்படைத்தனர்.

மேலும் இது சம்பந்தமாக ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ரேஷன் அரிசி கடத்திய கும்பல் மற்றும் தப்பியோடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

Views: - 0

0

0