இருசக்கர வாகனத்தில் செல்லும் போது மின்சாரம் தாக்கி பெண் பலி : தந்தை 3 வயது குழந்தை உயிர் தப்பினர்!!

By: Udayachandran
3 October 2020, 8:34 pm
Shock Dead - Updatenews360
Quick Share

திருவள்ளூர் : குடிநீர் மின் மோட்டாருக்கு செல்லும் மின் இணைப்பில் மின்சாரம் பாய்ந்து கணவன் கண்ணெதெரிலேயே மனைவி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மெதூர் கிராமத்தில் ஏரிக் கரையை ஒட்டிய பகுதியிலிருந்து பழவேற்காடு கூட்டு குடிநீர் திட்டத்திற்கு குடிநீர் செல்லும் மின் மோட்டார் இணைப்பில் சிக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற போது லட்சி பாலவாக்கத்தை சேர்ந்த ரமேஸ் என்பவரது மனைவி மீனா மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த அவரது கணவர் ரமேஷ் மற்றும் அவரது மூன்று வயது மகன் முத்துவேல் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொன்னேரி காவல்துறையினர் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான மின் மோட்டாரில் மின்சாரம் செல்லும் மின் இணைப்பு உரிய முறையில் மண்ணில் புதைக்க படாமல் வெளியிலேயே இருந்ததால் அதில் சிக்கி மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடியினரான ரமேஷ் அப்பகுதியில் ஆமை பிடிப்பதற்காக வந்தபோது மின்கம்பியில் மின்சாரம் தாக்கி மீனா உயிரிழந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

Views: - 35

0

0