அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின ஊராட்சிமன்றத் தலைவர் தேசியக் கொடியேற்றினார்.!

20 August 2020, 11:39 am
Thiruvallur Panchyat Chief - Updatenews360
Quick Share

திருவள்ளூர் : சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்ற அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின ஊராட்சி தலைவர் அமிர்தம் இன்று தேசியக்கொடியேற்றினார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி அருகே ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்றத்தில் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியேற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது ஊராட்சிமன்றத் தலைவரான அமிர்தத்தை தேசியக்கொடி ஏற்றவிடாமல், ஊராட்சி மன்ற செயலாளர் சசிகுமார், துணைத் தலைவரின் கணவர் ஆகியோர் தடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் காட்டுத்தீப்போல பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இந்த செய்தியை சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்த சம்பவத்தில் ஊராட்சி மன்றத் தலைவருக்கு எதிராக பேசிய ஊராட்சி மன்ற செயலாளர் சசிகுமார் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இன்று திருவள்ளூர் மாவட்டம் ஆத்து பக்கம் ஊராட்சி மன்றத்தில் பட்டியல் இனத்துப் பெண் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம் மீண்டும் தேசிய கொடிஏற்றினார்.

இதற்கு உறுதுணையாக இருந்த கிராம மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் இதற்கு உறுதுணையாக இருந்த ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி என்றும் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், இனி இதுபோன்று சம்பவங்கள் எந்த ஊராட்சிகளிலும் நடைபெறாது என்றும் ஊராட்சிக்கு தேவையான போலீஸ் பாதுகாப்புகள் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்த அவர் ஊராட்சி மன்றங்களில் மனைவி பஞ்சாயத்து தலைவராகவும் கணவர் ஊராட்சி செயலராக பணி புரிவதும் கணவர் ஊராட்சி மன்ற தலைவராகவும் மனைவி ஊராட்சி மன்ற செயலாளராகவும்ஒரே இடத்தில் பணிபுரிந்து வந்தால் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Views: - 26

0

0