திருவாரூர் அரசு மருத்துவமனையில் தாய் சேய் நலப்பிரிவு மையம் : முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!!

7 July 2021, 10:05 am
Stalin - Updatenews360
Quick Share

திருவாரூர் : முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன்முறையா திருவாரூர் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் பேறுகால அவசர சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் பிறந்த ஊரான திருவாரூருக்கு நேற்று பயணம் மேற்கொண்டார்.

முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக திருவாரூர் சென்ற ஸ்டாலின், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையத்தை திறந்து வைத்தார்.

பின்னர் காட்டூர் கிராமத்தில் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டதற்காக ஆட்சியருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கவுரவித்தார்.

Views: - 170

0

0