தேர்தல் கூட்டணி தலைமை யார்?முதலமைச்சர் கூறிய தகவல்!!

28 August 2020, 2:40 pm
Thiruvarur CM - Updatenews360
Quick Share

திருவாரூர் : 2021 சட்டமன்றத் தேர்தல் வரும் பொழுது கூட்டணிக்கு தலைமை யார் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் கே பழனிச்சாமி திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்தும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் விவசாயிகள் மகளிர் சுய உதவிக்குழுவினர் சிறு குறு தொழிற்சங்க கூட்டமைப்பினர் உடன் கலந்துரையாடல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை தமிழக முதல்வர் சந்தித்தார் அப்போது கூறியதாவது: காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த மாவட்டங்களில் 8 தொழில்கள் தொடங்க கூடாது என வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹைட்ரோகார்பன், மீத்தேன்கிணறு அமைக்க தடை, துத்தநாகம், இரும்பு, செம்பு, அலுமினியம், உருக்காலைகள், தோல் பதனிடும் தொழில் தொடங்க தடை விதிக்கப்படும்.

வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாறிவருவது அதிகரித்து இருப்பதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு, வீட்டு மனை என்பது அத்தியாவசியம். பலரும் நகரப்பகுதியில் அருகிலேயே வசிக்க விரும்புகிறார்கள் அவர்களுக்கு தேவையான வீட்டுமனைகளை காடுகளில் சென்று எடுக்க முடியாது இதற்காக தேவையின் அடிப்படையில் வீட்டுமனைப்பட்டா வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கடந்த ஜூலை 8ம் தேதியே பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். மேட்டூர் அணையில் உபரியாக உள்ள தண்ணீரை பயன்படுத்தி மட்டுமே உபரி நீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால் பாதிப்பு ஏதும் ஏற்படாது என்றார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி தலைமை குறித்து தேர்தல் வரும்போது அறிவிக்கப்படும். அதிமுக, திமுக உள்ளிட்ட எந்த கட்சியிலும் கூட்டணி குறித்த முடிவு எடுக்கப்படவில்லை. தேர்தல் வரும்போது கூட்டணித் குறித்து அறிவிக்கப்படும் என்று கூறினார்.

Views: - 29

0

0