இந்துக்கள்னா வேசி? பஸ்னா ஓசி? கேட்டால் TAKE IT EASY.. இது தான் திமுக POLICY : பாஜக பிரமுகர் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 October 2022, 5:48 pm

தி.மு.க. அமைச்சர்கள் இந்துக்கள் என்றால் வேசி என்கிறார்கள், பஸ்சில் சென்றால் ஓசி என்கிறார்கள், இப்படி ஏன் பேசுகிறீர்கள் என்று கேட்டால் டேக் இட் ஈசி என்கிறார்கள் என பதஜக மாநில துணைத்தலைவர் ஏ.ஜி.சம்பத் விமர்சித்துள்ளார்.

விழுப்புரத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் ஏ.ஜி.சம்பத், அவர் இல்லத்தில் இன்று செய்தியாளர்களை திடீரென சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமிக்கு அவரது திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டித்தருவோம் என்று விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போதே குறிப்பிட்டார்.

ஆட்சிக்கு வந்த 3 மாதங்களுக்கு பிறகு விழுப்புரத்தில் ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபமும், இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்தவர்களுக்கு மணிமண்டபமும் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

ஆனால் 1½ ஆண்டுகள் உருண்டோடி விட்டது, அதற்காக என்ன செய்தார் என்றே தெரியவில்லை. இங்கிருக்கிற பொன்முடி, இடம் பார்ப்பதாக சொல்லி 20 கார்களுடன் சென்று விளம்பரப்படுத்திக்கொண்டார். இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.

இதற்கான காரணம் அரசியலாகக்கூட இருக்கலாம். நிச்சயம் அதை நிறைவேற்றுவோர் என்று நம்புகிறோம் என்றார்.

மேலும் பேசிய அவர் தி.மு.க. அமைச்சர்கள் இந்துக்கள் என்றால் வேசி என்கிறார்கள், பஸ்சில் சென்றால் ஓசி என்கிறார்கள், இப்படி ஏன் பேசுகிறீர்கள் என்று கேட்டால் டேக்கிட் டீசி என்கிறார்கள்.

மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும். தி.மு.க.வில் இருந்த மூத்த தலைவர்கள் என்றைக்காவது இதுபோன்று பேசியது உண்டா? இதுபோன்று அவதூறான வார்த்தைகளை உச்சரிக்கக்கூடாது என்று ஸ்டாலின், தனது சகாக்களுக்கு கட்டளையிட வேண்டும்.

அவர் கண்டிக்கத்தவறினால் மக்கள் நிச்சயம் தண்டிப்பார்கள், அது தேர்தலாக இருக்கலாம், அல்லது போராட்டமாகவும் இருக்கலாம். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தன்மையை புரிந்துகொள்ளாதவர்கள் ஏதேதோ பேசுகிறார்கள். அந்த இயக்கம் பிரிட்டிஷ் சர்க்காரை எதிர்க்க உருவாக்கப்பட்ட இயக்கம்.

சுதந்திரத்திற்கு முன்பு எதைச்சொன்னார்களோ அதைத்தான் இன்றும் சொல்கிறார்கள். அது தேசிய இயக்கம், புனிதமான இயக்கம். இதையெல்லாம் ஸ்டாலின் புரிந்துகொள்வார் என்று நம்புகிறோம்.

எதிர்காலத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்க நிகழ்ச்சியை ஸ்டாலினே தொடங்கி வைப்பார். விழுப்புரத்தில் ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழாவில் அவரது மகன் என்ற முறையில் நான் கலந்துகொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!